ஞாயிறு, 14 நவம்பர், 2021

145. என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னை வாழ்க்கைப் போரில் வெற்றியடையச் செய்.

ராஜாதிராஜனே, சுயக்கட்டுப்பாடு, சாந்தம் எனும் நற்குணங்களைக் பயில்விக்கும் ஒழுக்கக் கலாசாலையில் எனக்கு நீ பயிற்சிகொடு.  ஆக்கிரமிக்க முனையும் இருள், பற்று, பேராசைக் கூட்டங்களுக்கு எதிராக நீ, பகவான் கிருஷ்ணரைப் போல, நற்குணங்களுக்குத் தெய்வ நாயகனாயிருந்து போரில் அவைகளை வழிநடத்த வேண்டும். என் மனத்தின் மேலுலக ராஜ்ஜியத்தினுள் வலிமையான தீய படைவீரர்கள் நுழைவதைத் தடுத்து நீ காக்க வேண்டும். உன் சமாதானக் கொடி என் ஆன்ம உயிர்மண்ணில் எப்போதும் தொடர்ந்து பறக்கவேண்டும்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
145 Make me win the battle of life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 12 நவம்பர், 2021

144. தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தென்றல் என்னைத் தொடும்போது உன்னை நான் உணருமாறு செய்.

இறைத்தந்தையே, தென்றல் என்னைத் தொடும்போதும், சூரியவொளி என் உடம்பை மேவும்போதும் அவற்றில் உன்னை நான் உணருமாறு செய். மலர்களின் சுகந்தத்தில் விரவி என்னுள்ளே வந்து புகு. என் அத்தியந்த எண்ணங்களின்மூலம் உன்னை நான் எப்போதும் உணருமாறு செய். உன்னை நான் மறந்தாலும், என்னை நீ மறந்துவிடாதே. உன்னை நான் நினைவு கூரவில்லையெனினும், என்னை நீ நினைவில் கொள். எப்போதும், என்றும், எக்கணமும் என்னுடனேயே நீ இரு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
144 Make me feel Thee through the touch of the breeze.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 11 நவம்பர், 2021

140. உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன்மேலுள்ள அன்பை எதனாலும் திருடிச் செல்ல முடியாது.

சத்தமாகவோ அல்லது முணுமுணுத்தோ சொல்லும் பிரார்த்தனை வார்த்தைகள் உன்மேலுள்ள அன்பை திருடிச் செல்லாமல் இருக்கட்டும். ஆன்மாவின் பேச்சற்ற மொழியினால், நான் உன் அவசியத்தை உணர்த்துவேன். உன் மொழி மௌனம், அம்மொழியினால் என் அமைதியின் வாயிலாக, நீ என்னிடம் பேச வேண்டும்; நீ எப்போதும் என்னை நேசித்துக்கொண்டே இருந்திருக்கின்றாய், ஆனால் நான்தான் அதனை அறியாமல் இருந்திருக்கின்றேன் என்ற உண்மையை எனக்கு உரைக்க வேண்டும்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
140 Nothing can steal my love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 10 நவம்பர், 2021

139. என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்ம சாந்தத்தில் உன் கீதத்தை நான் கேட்க விரும்புகின்றேன்.

உன் சன்னமான குரல், "வீடு திரும்பு", என அழைப்பதை நான் அவ்வப்போது கேட்டுள்ளேன்; ஆனால் அக்குரல் பல ஜென்மங்களில் மேவிய முரட்டுத்தனமான ஆசைகளின் இரைச்சலினால் அமிழ்ந்து போயின. பின்னர், முட்டிமோதும் ஆசைக்கூட்டங்களைத் துறந்தேன். என் மனம் நாடிய தனிமையில், என் பக்தியானது உன் குரலைக் கேட்கப் பேராவலுடன் பொங்குகின்றது. என் மனதில் இன்னும் உலவிக்கொண்டிருக்கும் இந்த பூலோக சத்தங்களின் கனவுகளை அப்புறப்படுத்து: என் ஆன்ம சாந்தத்தில் என்றும் ரீங்காரம் பாடும் உன் அமைதியான குரலை நான் கேட்க விரும்புகின்றேன்.           

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
139 I want to hear Thy song in the silence of my soul.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 9 நவம்பர், 2021

138. என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.

நான் தனிமையில் திக்குத்தெரியாமல் கதறியழுது கொண்டிருக்கின்றேன். கண்கள் மூடியவாறு, இருளின் கதவுகளை வெகுகாலமாய் தட்டிக் கொண்டிருக்கின்றேன், அவை திறந்து உன் ஒளியை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையால். என் நெஞ்சிலுள்ள கோடிக்கணக்கான தாப ஏக்கங்களால், உனக்காக நான் ஏங்குகின்றேன். நீ வருவாயா?  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
138 Open my soul's secret door.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

137. உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பிரேமபக்தி மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு.

பக்தியின் மதுரசத்தினால் எனக்கு மதக்களிப்பை உண்டாக்கு: நான்  சாகும்வரை உன்னுடையதைக் குடித்துக் கொண்டே இருப்பேன். என் உலக ஆசைகள் மடிந்து, உன்னுள்ளேயே இனி நான் எப்போதும் வாழ்வேன். என் உடம்பின் ஒவ்வொரு உயிரணுவிலும் சிலிர்ப்பூட்டும் ஊற்று பொங்கி, உன்மேல் கொண்ட என் அன்பின் ஒவ்வொரு திறவின் வழியேயும் வெளிப்படுகின்றது. பக்தியிலேயே தோய்ந்து, உன் சாந்நித்தியம் நிலவும் மேலுலகத்தினிற்குள் நுழைவேன். குருட்டுத்தனமாக அங்குமிங்குமென தேடியலைந்த என் பக்தியின் வேகம், திடீரென ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திறந்தது; ஆஹா, என்னே ஒரு ஆனந்தவுணர்வு உன் ஜோதியை தரிசிக்கும்போது! 
---
cell - உயிரணு
--- 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
137 Intoxicate me with the wine of Thy Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 7 நவம்பர், 2021

136. பக்தியெனும் சுகந்தப் போளத்துடன் நான் உங்களை அணுகுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பக்தியெனும் சுகந்தப் போளத்துடன் நான் உங்களை அணுகுகின்றேன்.

குவிந்த கரங்களால், வணங்கிய தலையுடன், பணிவெனும் சுகந்தப் போளத்தை நெஞ்சில் சுமந்து, நான் உங்களை அணுகுகின்றேன். நீங்கள் என் பெற்றோர்; நான் உங்கள் குழந்தை. நீங்கள் என் எஜமானன்; நான் உங்கள் அமைதியான கட்டளைக்கு ஏவல்செய்யத் தயாராகவுள்ளேன். அனைத்து இதயங்களிலிருந்தும் மணக்கும் பக்தியை ஒன்றுகூட்டி, என் ஆனந்தக்கண்ணீரால் கலந்து வைத்துள்ளேன். ஏக்கத்தினாலே பெருகும் என் ஒளிரும் தூய கண்ணீராறு உங்களை சந்திக்க விரைகின்றது. என் கொந்தளிக்கும் பக்திவெள்ளம் நிராசையெனும் பாலைவனத்தில் விரயமாக ஓடி வற்றாமலிக்க நீங்கள் அதைக் கவனிப்பீர்களா?  என் காட்டாற்று பக்திவெள்ளம் உங்களை அடையும் சரியான பாதையில் பாயுமாறு நீங்கள் அதைக் கண்காணிப்பீர்களா?   
---
Myrrh = போளம் (சாம்பிராணி வகை)
--- 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
136 I bring for Thee the myrrh of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 5 நவம்பர், 2021

131. என் உள்முகக் கண்ணினைத் திற.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் உள்முகக் கண்ணினைத் திற.

பெருஞ்ஜோதிச் சுடரூற்றே, என் உள்முகக் கண்ணினைத் திற, அதன்மூலம் நான் பலவித வர்ணங்களிலாலான அணுக்களின் நடனங்களுக்கு நடுவே உன்னைக் கண்டுகொள்வேன். என் வானவெளியின் கதவுகளைத் தகர்த்தெறி, அதன்மூலம் நான் ஜடப்பொருள்களின் மாயமேக மூட்டத்தினையூடுருவி அதன் பின்னே உன்னை காண்பேன். பிரகாசமான பிரபஞ்சக் கதிர்களின் மதில்சுவர்களுக்குப் பின்னே நீ மறைந்து நிற்கின்றாய். வாயிற்கதவைத் திற, அதன்மூலம் உன்னை நான் எல்லாவிடங்களிலும் காண்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
131 Open my Inner Eye.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 3 நவம்பர், 2021

130. அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனைத்துவகையான மனித அன்பிலும், கடவுளின் அன்பினைக் காண உரிமையுடன்-வேண்டுதல்.

அனைத்துவகையான அன்பினிற்கும் கடவுளான உன்னை, நான் எல்லா மனித நேசங்களின் அன்பினால் நேசிக்க வந்துள்ளேன். நீயே காக்கும் தந்தை. தனது பெற்றோர்களிடம் மழலையன்பு காட்டும் சிறு குழந்தையும் நீயே. வரம்பற்ற கருணையைப் பொழியும் தாயும் நீயே. ஆருயிர் அன்பர்களுக்கிடையே பாயும் முழுமையான சரணாகத-அன்பின் உயிரோட்டமும் நீயே. நீயே நண்பர்களின் சிநேகித அன்பு. ஒரு சேவகன் தனது எஜமானனிடம் காட்டும் மரியாதையால் என்னைத் தூய்மைப்படுத்து. இம்மையிலும், மறுமையிலும் வற்றாத அன்பின் நீரூற்றான உன்னை, நான் அனைத்துவித தூய அன்பினாலும் நேசிக்க எனக்குக்கற்பி. அனைத்து அன்பினாலும் தெளித்து என்னை நீராட்டு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
130 Demand to see the love of God in all human love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 1 நவம்பர், 2021

129. என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்.

இறைத்தந்தையே, மாகாற்றால் அலைக்கழிக்கப்பட்ட என் உள்ளம், என் அலட்சியமெனும் மேகங்களினால் மறைக்கப்பட்ட உன் சாந்நித்தியத்தின் வெள்ளிக்கீற்றின் தரிசனத்தைப் பெற நான் பிரார்த்திக்கிறேன். உன் நம்பிக்கையெனும் சந்திரன் என் இதயத்தில் குளிர்கிரணங்களை வீசட்டும். என் மனத்தின் தொடுவானத்தில் நீ மெதுவாக உதிக்கின்றாய்; உன் அன்பின் நிலவொளியின் ஏற்றத்தினால் அறியாமை மூட்டங்கள் விலகுகின்றன. ஒளியின் தந்தையே, சிதிலமடைந்த என் உள்ளப் படகு உன் ஆனந்தக் கரையை மகிழ்ச்சியுடன் தரிசிக்கின்றது. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
129 Thou art slowly rising on the horizon of my mind.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!