புதன், 15 டிசம்பர், 2021

198. உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் என்னைத் தாலாட்டித் தூங்கச் செய்.

நெடுங்காலமாக வேண்டி இறுதியாக என் கோயிலுக்குள் நீ வந்துள்ளாய். என் புலன்களின் கதவுகள் அகலமாகத் திறந்திருக்கின்றன. இருட்பறவை தன் சிறகுகள் விரித்துப் பறந்துசென்றுவிட்டது. பழமையான என் காதல்கவிதையைப் புதிதாகப் பாடியிசைக்க நான் என் இதய யாழ்-தந்திகளை இயைத்துக் கொண்டுள்ளேன். என் ஆன்மாவிலிருந்து மலரும் புதிய ஸ்வரங்களைக் கொண்டு நான் உனக்குப் புதிய பொலிவுடன் துலங்கும் ஒரு கானத்தைப் பாடுவேன்.

என் கானத்தின் ஒலியலைகள் உன் பிரபஞ்ச-தாளக் கடல்மீது நடனம் புரியும்.  அப்படியே, என்னை பக்திப் பேரலைகளால் மிதக்கவைத்து உன் கரைக்கு அழைத்துச்செல்.

கான-அலைகளின் தாலாட்டே, உயிரினும் பிரியமான என் நிரந்தரத் தாயின் தாலாட்டை எனக்காகப் பாடு.

கடவுளன்பின் கந்தர்வ கானமே, என்னை உன் இனிய ராகத் தொட்டிலிலிட்டு ஆட்டி, கடவுளின் நெஞ்சகத்திலுள்ள சாந்தத்தில் தூங்கச் செய்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
198 Rock me to sleep on Thy Bosom of Peace.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 14 டிசம்பர், 2021

197. எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்கள் கூட்டுப் பிரார்த்தனைகளை பலப்படுத்து.

எங்கள் நெஞ்சிலிருந்து ஒருமித்துப் பொங்கும் எங்கள் பிரார்த்தனை நீரோடைகள் எல்லாம் ஒன்றாக இணைந்து பெருவேகத்துடன் பாய்கிறது. இந்த அகலமான, ஆழமான பிரார்த்தனை நதிகள் அனைத்தும் உன் சன்னிதானமெனும் கடலைத் தேடி அதிவேகமாக ஓடுகின்றன. எங்கள் வெள்ளம், அலட்சியமெனும் தடைகள், மயக்குறு மனிதப் பழக்கவழக்கங்கள், லோகாயத-விகல்பங்கள் என இவையாவற்றையும் தகர்த்துக் கொண்டு பாய்கின்றது. எங்கள் வெள்ளம் சோதனைகளாலும் வாழ்க்கை அனுபவங்களாலுமான பரந்த பிரதேசத்தில், மனித அறியாமையெனும் மணல்களின் வழியாக ஓடிச் சென்று கொண்டிருக்கின்றது. ஆயினும், உன் கடற்கரை வெகு தொலைவில் இருப்பதுபோல் தோன்றுகின்றது,  தாகத்துடன் கூடிய  எங்கள் வெள்ளம் உன் பிரகாசமான பெரும்பரப்பைத் தேடி பரபரப்பாக ஆனால் உறுதியாக சென்று கொண்டுள்ளது.

உன் கருணை மழையை இடைவிடாமல் அடைமழையாய்ப் பொழி. எங்கள் பிரார்த்தனை வெள்ளங்களை பலப்படுத்தி, எப்போதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் உன் கரைக்கு அவைகளை விரைந்துசெலுத்தி ஜெயமடையச் செய்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
197 Mayest Thou reinforce our blended prayers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 12 டிசம்பர், 2021

196. உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் மேலுள்ள அன்பினால் என்னுள்ளிருந்து ஊறும் புனிதமான கண்ணீரில், ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன்.

நீளமான, துரதிருஷ்டமெனும் வளைந்து நெளிந்து செல்லும் பாதைகளின் வழியாக, நெடுங்காலப் பிரிவெனும் மனோராஜ்ஜிய இடைவெளிகளைத் தாண்டி, முடிவற்ற ஜென்மங்களெனும் பந்தயத் தொடர் பாதைகளில் ஓடி, பல லட்சியங்களெனும் படிக்கட்டுக்களைக் கடந்து, பல்வேறு ஆசைகளெனும் வழிகளைப் பின்தொடர்ந்து, சோகமும் இன்பமும் மாறிமாறி வரும் சுழல்பாதைகளிலிருந்து விடுபட்டு - இறுதியில் நான் என் பயணத்தின் முடிவில் நிற்கின்றேன். நான் என் கடந்த அனுபவங்களை இனிமையாக நினைவுகூர்கின்றேன்; ஒவ்வொரு கடந்த காலத்துத் துன்பமும், இப்போது ஒரு இனிமையான ஆனந்தக் கண்ணீரூற்றைத் திறந்துவிடுகின்றது. உன் மேலுள்ள அன்பினால் பரிமளிக்கும் அந்தப் புனிதமான கண்ணீரில், நான் தினமும் ஞானஸ்நானம் செய்து கொள்கின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
196 I baptize myself in the sacred waters of my tears of love for Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 11 டிசம்பர், 2021

188. என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன.

உன் வருகையால் என் முன்னாலுள்ள பல கதவுகள் தானாகத் திறந்துகொண்டன. கடவுளே, நீ வந்தபோது எல்லாமே ஜீவகளையுடன் பிரகாசித்தன. கோயிலில் நான் நின்றிருந்த இடத்தில் பளிங்குத்தளம், உன் சாந்நித்தியதால் எனக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. உன் தொடுகையால் ஜடப்பொருட்கள் உணர்வுப் புனருத்தாரணம் பெற்று, எல்லாப்புறங்களிலுமிருந்து அவை பேசின. உன் ஆனந்த நறுமணத்தைச்  சுமந்து, நிஸ்சலமெனும் சுகந்தமான காற்று எல்லாப்பக்கங்களிலும் தவழ்ந்து பரவியது. 

உடைந்துபோன அமைதிப்பாறைகளின் அடியில் மறைந்திருக்கும் உன் சரணாலயத்தைக் கண்டுகொண்டேன்.

புனிதமெனும் தூய பலிபீடத்தின் மேல் உன் ஆனந்தப் பேரூற்று துள்ளிக் குதிக்கின்றது.

ஏந்திய என் உள்ளங்கைகளில், உன் ஆறுதலெனும் உயிரூற்று நீரை வாங்கி அருந்துகின்றேன். இனி எனக்கு தாகமென்பதே கிடையாது என்பதை நான் அறிகின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
188 Many doors opened before me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 9 டிசம்பர், 2021

187. உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உனது மதுரத்தை அருந்துமாறு உன் ரீங்காரப்பட்சிக்கு அருள்புரி.

என் கனவுகளினாலான தோட்டத்தைத் தேடி, உன் நாமத்தை ரீங்காரித்து, இடையறாமல் எண்ணிலடங்கா மைல்கள் தூரம் நான் பறந்துசென்றேன்.

நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி; ஆயினும், என் செயலாக்க இறகுகளை எப்போதும் பணியில் ஈடுபடுத்திக் கொண்டுள்ளேன். ஏனெனில், உயர்ந்தோங்கிய மலையுச்சி நிகர் கனவுகளில் வண்ணமயமாகப் பூத்துக்குலுங்கும் உன் அரிய பூந்தோட்ட மலர்களைத் தேடி நான் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது. 

நான் உன் நாமத்தை ரீங்காரிக்கும் ஒரு ரீங்காரப்பட்சி, அதன் உணர்வெனும் நீண்ட அலகுகளைப் பொன்மய, நீலவண்ண, செந்நிற, மற்றும் பலவண்ண மலர்-குணங்களின் நெஞ்சில் ஆழ்த்தி சுவைக்கின்றது. தீயனவற்றின் கடுக்கும் தேனை சுவைப்பதிலிருந்து என்னை உன் அருள் காக்கட்டும். 

உன் சோர்வடையா அபரிமித சக்தியினால் நான் துறுதுறுவென்று ரீங்காரித்து, உன் புகழ்மகிமையாலான தொங்கும் தோட்டங்களிலும், பணிவான மனித இனிமை மேவும் பாதையோரகளிலும் வளரும் அன்பினால்-தோய்ந்த மலர்களிலிருந்து மதுரத்தை அருந்தும் நான் உன் சின்னஞ்சிறு ரீங்காரப்பட்சி.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
187 Bless Thy Humming Bird to drink of Thy honey.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 7 டிசம்பர், 2021

186. நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனது தூய்மையான சொர்க்கலோகப் பறவையாக வேண்டுகின்றேன்.

பரந்து விரியத்தக்கப் பொன்மய இறக்கைகளையும், மிருதுவான கோமள சிறகுகளையும் கொண்டு வர்ணப் பொலிவுடன் அழகிய ரூபத்தில் உன்னால் சிருஷ்டிக்கப்பட்ட சொர்க்கலோகப் பறவை நான்.

முன்னேற்றத்திற்காகத் தணியாத ஆசைகொண்ட என் இறக்கைகளை வீசி, சாந்தி சொர்க்கத்தை நாடி, இறுக்கமான வாழ்க்கை வானத்தில் நான் இடையறாமல் சிறகடித்துப் பறந்துள்ளேன். 

கலக்கமெனும் இருள் பலமுறை என் பிரகாசமான மனத்தின் இலகுவான இறகுகளை மூடி, அவற்றின் ஒளியை மங்கச் செய்துள்ளன.

கடவுளே, மாசடைந்த உன் சொர்க்கலோகப் பறவையை உள்காட்சியெனும் தூய்மைப்படுத்தும் சூரிய-ஒளிக் கதிர்களாலும், இனிமையாக சலசலக்கும் சாந்தி நீரோடையிலும் நீ நீராட்டு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
186 I want to be Thy cleansed Bird of Paradise.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 6 டிசம்பர், 2021

177. உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் பரந்த சன்னிதானத்தில் சங்கமிக்க நான் விரும்புகின்றேன்.

அன்பின் ஊற்றே, உன் சர்வவியாபக அன்பு வெள்ளத்தினால் எங்கள் நெஞ்சங்கள் அனைத்தும் நிரம்பி வழிவதை நாங்கள் உணருமாறு செய். எங்கள் ஆசைநதிகள் எல்லாவற்றிற்கும் ஆதிமூலமே, எங்களை அற்பமான புலனின்ப மண்ணில் பாய்ந்து, வறண்டு ஆவியாகிப்போகாமல் இருக்க எங்களுக்குக் கற்பி. 

எங்கள் ஆசைநதிகள் பணிவு, சுயநலத் தியாகம், பிறர்நலம் பேணுதல் எனும் எல்லா தாழ்வான நிலங்களின் வழியேயும் பாய்ந்து, இறுதியில், உன் அருட்கொடை மழையினால் மேலும் பெருகி, அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்க நாங்கள் உரிமையுடன்-வேண்டுகின்றோம்.

எங்கள் அனுதாபம், அன்பு, பாசமெனும் கிளைநதிகள், வறண்ட சுயநலமெனும் பூமியில் வழியே பாய்ந்து அருகிப் போகாமலிருக்க எங்களுக்கு அருள்.

உன்னிடமிருந்து தோன்றிய எங்கள் அன்பின் தனித்தனியே பிரிந்து ஓடும் சிற்றோடைகள் எல்லாம், இறுதியில் அனைத்தையும் பூரணதிருப்தியாக்கும் உன் கடலில் சங்கமிக்கட்டும்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
177 I want to merge in the vastness of Thy Presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
Compare with:
71 Flood me with Thine Omnipresent Love.
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 5 டிசம்பர், 2021

176. நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நாங்கள் உன் உதவிக்காகக் கதறும் தீக்கிரையான உன் குழந்தைகள்.

தவறான சுகங்களின் மயக்கும் தீ, அதனுடன் விளையாட உன் குழந்தைகளைக் கவர்ந்தது. அந்த நாசமேற்படுத்தும் ஜ்வாலைகளின் கறுக்கி, வடுப்படுத்தும் விளைவுகளைக் குறித்து உன் அமைதியான குரல் அவர்களை எச்சரித்தது. ஆனால் அவர்கள் உத்வேகத்துடன் அந்த அற்ப சுகத்தின் கனல்களை முனைந்து பற்றிக் கொள்ள விழைந்தனர். விழுங்கும் தழலின்கண் பலர் அவர்களின் பேராசைக் கைகளை அழுத்திக் கோரமாக அடிபட்டுக் கொண்டனர். பின், அவர்களின் அதிருப்திக் காயங்களும், சிற்றின்ப திகட்டல்களும், உன் உதவியை நாடி, உனக்காக அவர்களைக் கண்ணீர் சிந்த வைத்தன.

பெரும் பொறுமையுடைய மருத்துவரே! என்றும்-தவறாமல் குணமாக்கும் உன் மன்னிப்பும் அன்பும் கலந்த மருந்துக் களிம்பை வைத்துக் கொண்டு நீ  அருகிலேயே நிற்கின்றாய். உன் எச்சரிக்கும் குரலை நாங்கள் கேட்கக் கற்றுக் கொடு; அதன்மூலம், நாங்கள் தேவையற்ற வேதனையால் துடித்து, அனாதரவாய்க் கதறாமல், மாறாக உன்னை நோக்கி இனிய பாட்டுக்களாய்ப் பாடுவோம்.

நாங்கள் உன் சொல் கேளா குழந்தைகள், இவ்வுலகின் தீய கேளிக்கைகள் எங்களைச் சுண்டி இழுக்கிறது. அவற்றின் இழுவைக்கு ஆட்படாமல், தெய்வீகமான உன் பேருணர்வு ஜோதியுடன் மட்டுமே இனி நாங்கள் விளையாட எங்களுக்குக் கற்றுக் கொடு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
176 We are Thy burned children, wailing for Thy help.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

175. என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னுள் உன் வரம்பற்ற நடனத்தை ஆடு.

தெய்வத்தாயே, உனக்கு நாச நாட்டியம் (நாஸ்யம்) ஆடுவதில் பிரியம். 

பலவீனமான அழியும் (உடற்) சுடர்களை உன் நாசமேற்படுத்தும் போர்-நடனத்தில் சிதைவிக்கின்றாய், அதன்மூலம், எங்கள் ஆன்மாக்கள் சிதையாமல் பத்திரமாக இருப்பதை நீ புன்னகையுடன் காட்டுவதற்காக.

உன் கருணையினால், நீ எங்களைச் சுற்றி மூடியிருக்கும் கடினமான மாயமோகங்களின் களிம்புப் படலத்தைத் தேய்த்து அகற்றுகின்றாய்.

தெய்வத்தாயே, நீ அழிவு நடனத்தை விரும்புவதினால், நான் என் ஆசைகள், குறைகள், பலவீனங்கள், குறுகிய குணங்கள் ஆகிய அனைத்திற்கும் அவை என்றும் திரும்பாவண்ணம் ஒரேயடியாய்க் கொள்ளிவைத்துவிட்டு, தீயனவற்றை ஒழிக்கும் உன் நாட்டியத்தில் இணைந்து ஆடுகின்றேன்.

தெய்வத்தாயே, இப்போது என் குறுகிய தன்மை விட்டொழிந்ததால், நீ அழிக்க வேண்டுவது என்னுள் எதுவும் மீதமில்லை, ஆகையால் உன் அழிவு நடனத்திற்குப் பதிலாக என்னுள் உன் வரம்பற்ற அன்பு நடனத்தை ஆடு.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
175 Dance in me Thy dance of Infinity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 2 டிசம்பர், 2021

174. என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் ஆன்மப் பெட்டகத்துள்ளே என் புனிதப் பேரார்வங்களைப் பூட்டி வைத்துள்ளேன்.

உன் வரம்பற்ற பார்வையின் கைத் தொட்டிலில் என் குறுகிய தன்மை துயில் கொண்டிருந்தது. மிருதுவான உன் சாந்தமெனும் பாதத்தின் காலடியோசையைக் கேட்டு, சத்தம்செய்யும் சிற்றின்பங்களின் இரைச்சல் தணிந்துள்ளது.

நான் விழித்துக்கொண்டு காத்திருந்தேன். 

அமைதியின் அரசே, சிமிழ்க்கையுடனான  குதூகலங்கள், ஆன்ம-கானங்கள், மந்திர ஜபங்கள் உன்னை வரவேற்க எழுச்சியுடன் உன் சாந்தம்-பொதிந்த அரியணையை நோக்கிச் செல்கின்றன.

இருளினாலே மறைக்கப்பட்ட சிதைந்த கனவுகளின் வைரத்துகள்கள், உன் மின்னொளி வீசும் வரவினால் மங்கி மினுமினுத்தன. 

நான் என் ஞாபகப் பெட்டகத்துள் பூட்டி வைத்திருந்த என் அனைத்துப் புனிதப் பேரார்வங்களையும், எனக்குமுனக்கும் இடையேயுள்ள விலைமதிப்பற்ற ஒப்பந்தங்களையும் வெளியே எடுத்து, அவற்றை அன்பின் ஒப்பற்ற மதிப்புடைய செம்பொன்னாகப் பண்டமாற்று செய்தேன். அவற்றைக் கொண்டு நான் உனக்கு எப்போதும் நிலைத்திருக்கும் ஒரு ரகசிய கோயிலை என் ஆன்மாவிற்குள் எழுப்புவேன், அங்கு உன் சாந்த அரியணை அமைந்திருக்கும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
174 I locked my sacred aspirations in my soul-vault.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!