வெள்ளி, 26 நவம்பர், 2021

159. பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்சக் கதிர்களால் ஊட்டிவிடுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

நான் அமைதிக்கோயிலுக்குள் நுழைய ஆரம்பித்தேன். கண், காது, சுவை, நுகர்வு, தொடுவுணர்வு ஆகிய மினுமினுக்கும், கவனத்தைக் குலைக்கும் மின்பல்புகளை அணைத்தேன்; ரத்தத்தை-சுத்தீகரிக்கும் மூச்சினைச் சத்தம் செய்யாமல் இயங்குமாறு பணித்தேன். தெய்வத்தாயே, உன் காலடிச்சப்தம் கேட்டவுடன், என் பலகோடி உயிரணுக்களை ஸ்தூல ரத்தத்தினால் அடிமைப்படுத்தும் இதயத்தை நான் அவ்விதம் செய்யாமல் இருக்கச் சொன்னேன், ஏனெனில், நீ வரும்போது உன்னுடன் உயிரளிக்கும் ஆன்மீகக்கதிர்கள் நிரம்பிய குவளையை ஏந்தி வந்தாய். 

தெய்வத்தாயே, அவைகளால் எனக்கு மேன்மேலும் ஊட்டிவிடு! இதயம்,  உயிரணுக்கள், மனம், எண்ணங்கள் ஆகியன இனி தேய்மானம் அடையாது, ஏனெனில், உன் நிரந்தர உயிரினால் சாகாத்தன்மை பெற்றதால்.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
159 Demand to be fed with Cosmic Rays.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 25 நவம்பர், 2021

156. மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பினை உதிக்கச்செய்யுமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

வரம்பற்ற பேருணர்வே, உன் இருப்பு கதகதப்பான சூரியனின் கதிர்களிலும், குளிர்ந்த நிலவொளியிலும் சமமாக மேவி அவைகளின் பின் மறைந்துள்ளது. அந்த ஒளிமண்டலங்கள், அழகிய இயற்கைக்கன்னியின் பொருள்களாலான மேலாடையை வெளிச்சம்போட்டுக் காட்டுகிறதேயன்றி உன்னைக் காட்டுவதில்லை; எனவே, அவைகள் என்னைப் பொறுத்தவரை இருட்டிற்குச் சமானம். இவ்விதமாக, சர்வத்தையும்-பிரகாசிக்கும் உன் பெருஞ்ஜோதி பொருட்களை-பிரகாசிக்கும் ஒளிமண்டல இருளிற்குப் பின்னால் மறைந்துள்ளது. இந்த இருளை விலக்கு! நான் சுய இருளினால் சூழப்பட்டு, என் கண்களை மூடி அமர்ந்திருக்கையில், மெய்யறிவென்னும் ஜோதிப்பிளம்பின் பிரகாசம் என்னுள் சுடருமாறு செய்; அந்த ஒளியின்மூலம் நான் உன்னை வழிபடும் கண்களால் தரிசிப்பேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
156 Demand for the rising of the Aurora of Intuition.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 24 நவம்பர், 2021

155. கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்திமான ஆன்மீகக்கண்ணைத் திறக்குமாறு உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, கிழக்கிலுதிக்கும் ஞான நட்சத்திரத்தினைக் காண எனக்கருள். அது என் மனிதக்கண்களின் முன் அல்லும் பகலும் பிரகாசிக்கட்டும். வெகுகாலமாய் லோகாயத விஷயங்களின் பொய்யான-ஜொலிப்பில் என் கண்கள் குருடாகியுள்ளன. நான் அவைகளை எப்போதும் வெளிமுகமாகவே பார்த்து வந்ததால், அவற்றின் உள்ளேயுள்ள பேருணர்வைப்  பார்க்க இயலவில்லை. நான் பொருட்களெனும் கடுகு-விதைகளைத்தான் கண்டேனேயன்றி, அதனுள்ளே மறைந்திருக்கும் பேருணர்வெனும் எண்ணெயைக் காணவில்லை. ஞானதிருஷ்டி அளிக்கும் என் மூன்றாம் கண் இப்போது திறந்து கொண்டுள்ளது. அதை, நீ எப்போதும் திறந்தே வைப்பாயாக. மெய்யுணர்வின் அந்த ஒருமைக்கண் என்னைப் பொருட்களின் திரையை  ஊடுருவி, கிறிஸ்துவின் [கூடஸ்த சைதன்யத்தின்] வரம்பற்ற இருப்பை எல்லாவிடங்களிலும் காணுமாறு செய்வாயாக. என் புனித, அறிவார்ந்த எண்ணங்கள், இந்த ஞான நட்சத்திரத்தின் வழிகாட்டுதலைப் பின்பற்றிச் சென்று, எல்லாவற்றிலும் கிறிஸ்துவை சந்திக்குமாறு எனக்கருள்வாயாக. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
155 Demand for the opening of the spiritual eye, the Eastern Star of Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 22 நவம்பர், 2021

154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.

நான் தீயன கேட்காமலிருக்க, தீயன பார்க்காமலிருக்க, தீயன பேசாமலிருக்க, தீயன கனாக்காணாமலிருக்க, தீயன எண்ணாமலிருக்க, தீயன உணராமலிருக்க எனக்கருள். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
154 Keep me away from evil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

153. என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் புலன்கள் நல்லவற்றைத் தவிர வேறெதையும் நாடாதவாறு எனக்குக்கற்பி.

நான் நல்லவற்றைத் தவிர வேறெதையும் காணாதவாறு எனக்கருள். நான்  சுத்தமானவற்றைத் தவிர வேறெதையும் தொடாதவாறு எனக்குக்கற்பி. நான்  உன் குரலை மட்டுமே எல்லா நற்சொற்களிலும் கானத்தின் இனிமையழகிலும் கேட்குமாறு என்னைப் பழக்கு. பேருணர்வின் மலர்களிலிருந்து வீசும் தூய மணத்தை மட்டுமே நுகருமாறு என்னை வழிநடத்து. ஆன்ம-புஷ்டியளிக்கும் முழுமையான ரசத்துடனுள்ள உணவை உண்டுகளிக்க என்னை அழை. உன் தொடுதலை நினைவுபடுத்துவதையே நான் தொடுமாறு எனக்குக்கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
153 Teach me, that my senses may contact nothing but the good.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 20 நவம்பர், 2021

151. என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் உடல்-தேர் சரியான பாதையில் பயணிக்க வழிநடத்து.

என்னால் என்னை ஆட்கொள்ள நீ எனக்குக்கற்பி. என் ஐம்புலக் குதிரைகளை மனக்கடிவாளத்தினால் பூட்டி, என் விவேகமெனும் தேரோட்டி அவைகளை நன்கு வழிநடத்த நீ எனக்கு அருள்புரி. என் ஜீவாத்மா, இந்த உடம்பெனும் சிறு தேரில், ஒழுக்கமெனும் சக்கரங்களுடன், பற்பல பூலோக-ஜென்மங்களெனும் வேகவழிப்பாதைகளில் வெற்றிகரமாக சுற்றி, இறுதிப் பந்தயத்தின் கடைசிச் சுற்றில் ராஜாதிராஜனின் வரம்பற்ற அரசத்தேரில் தான் பத்திரமாக அமர்ந்திருப்பதை உணரும்வரை, ஓடிக் கொண்டேயிருக்கட்டும்.     

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
151 Lead my body-chariot on the right path (Inspired by the Hindu Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

149. இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

இருண்ட காட்டினிற்குத் தீ வைக்க உரிமையுடன்-வேண்டுதல்.

மாயமோகத்தினாலான இருண்ட காட்டில், நான் பக்தியெனும் நெருப்பைப்  பற்றவைத்தேன், ஆனால் புகைமூட்டத்தினால் அதன் தீ வளர்வது தடைப்பட்டது. பின்பு, நீ வந்து சில பலவீனங்களுக்குத் தீ வைத்தாய். உன் நெருப்பு சீக்கிரமாகப் பரவி, என் ஆசைகளெனும் முட்செடிகள், டாம்பீகமெனும் நெட்டையான மரங்கள், முரட்டுத்தனமெனும் அடர்ந்து மண்டிய புதர்கள் என இவையாவற்றின் மீதும் விரிந்தது. என் இருளினாலான முழு காடும் எரிகின்றது; உன் ஒளியை நான் எல்லாத்திசைகளிலும் காண்கின்றேன். இறைத்தந்தையே, உன் உதவிக்கு நான் நன்றிகூர்கின்றேன். நான் அனைவருக்காகவும் ஒளியினாலான பாதையை உருவாக்க விரும்புகின்றேன் - எனக்கு நீ இப்போது உதவியது போல் எப்போதும் உதவு!

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
149 Demand to set fire to the forest of darkness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 18 நவம்பர், 2021

148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.

உன் வருகையை எதிர்நோக்கி என் இதயத் தோட்டத்தில் என் பக்தி மலர்கள் மலரட்டும். அம்மலர்களை மாலையாய்க் கோர்த்து, அதை உனது பாத சரணங்களிலே சமர்ப்பிப்பேன்!
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
148 I offer Thee a garland of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 17 நவம்பர், 2021

147. அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அஹங்காரத்தினாலும், மடியினாலும் அடிமைப்படாமலிருக்க உரிமையுடன்-வேண்டுதல்.

நான் என் சுய இச்சாசக்தியை உபயோகிக்க விரும்புகின்றேன்; ஆனால், இறைத்தந்தையே, அதை நீ பூரண திருப்தியெனும் பொன்மய சொர்க்கத்திற்கு வழிநடத்து. நீ என்னைப் பலனற்ற ஆசையாலும், தளரும் நம்பிக்கையாலுமான சிறைக்கதவுகளுக்குப் பின்னால் என்னைக் குறுக்கி அடைக்காமல் இருப்பதை அறிவதனால், நான் அனந்தத்தின் ஆனந்தக்குழந்தையாக இருப்பேன். 

நான் பழிக்கத்தகு சோம்பல் சங்கிலிகளை உடைத்தெறிவேன். அதனால், பயமற்ற சுதந்திரத்துடன் அடியெடுத்து வைத்து, குறுக்கங்களும், மாயமோகங்களுமாலான காட்டினை மின்னல்போல் கடந்து செல்வேன்.

என் புல்லிய அஹங்காரம், "என் பெருமையைக் காண்! என்னை வழிபடு!" என மதம்கொண்டு பீற்றுகிறது. ஆனால், நான் அதன் மாயத்தோற்றத்தை ஒதுக்கிவிட்டு, கற்பனைக்கெட்டாத அழகுடைய மற்றொரு ரூபத்தைக் காண்பேன். அமைதியுடன் இயைந்த என் ஆன்மக் காதுகளால், உன்னைப்போல ஆள்மாறாட்டம் செய்யும் அந்தத் தூசிநிகர், மார்தட்டும் மாயவித்தைக்காரனைக் கேட்பதைத் தவிர்த்து, உன் ஒப்பரியாத குரலினால், "நானே அவன்!" என்று காலங்காலமாக சன்னமாக ஒலிக்கும் பிராணவாயுச் சிறகுகளுடன் கூடிய மணங்கமழும் சங்கீதத்தை நான் மனம் லயிக்கக் கேட்பேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
147 Demand not to be enslaved by the ego or by passivity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 14 நவம்பர், 2021

146. கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கெட்ட பழக்கங்களெனும் எதிரிகளை வெளியேற்ற உரிமையுடன்-வேண்டுதல்.

உக்கிரமான எதிரிகள், பிடிமானமுடைய அசுத்த சஞ்சலமனப் பழக்கங்கள், என் இதய எல்லைக்குள் அவ்வப்போது புகுந்து ஆக்கிரமித்துக் கொள்கின்றன. என் சாந்தச் செழிப்பைக் கொள்ளையடிக்க யத்தனிக்கும் அந்த எதிரிகளை நான் வெல்லுமாறு செய். என் போராடும் சக்திகளை ஊக்குவித்து பூரணதிருப்தியெனும் ராஜ்ஜியத்திற்கு நீ வழிநடத்து.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
146 Demand to eject enemies of bad habits.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!