திங்கள், 27 செப்டம்பர், 2021

52. எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

எங்கள் இதயமொட்டுக்களைச் சிறைப்படுத்தும் இதழ்களைத் திற; எங்கள் சிறைப்பட்ட அன்பின் சுகந்தமணம் உன்னைச் சந்திக்க விரைந்து பரவட்டும். பிரபஞ்ச நோக்கெனும் காற்றினால், எங்கள் சுகந்தமணம் உன் எல்லையற்ற கோயிலுக்குத் தவழ்ந்து செல்லட்டும். 

எங்களின் எல்லா லட்சியங்களுக்கும் அரசே, செம்மையான மேகங்களாலும், அழகு-மிளிரும் மனிதக் கனவுகளாலுமான உன் சாளரக் கதவுகளையெல்லாம் திறந்துவிடு. எங்கள் ஆன்ம மாளிகைகளில் புனிதமான லட்சியங்களாலான கதவுகளையெல்லாம் திறந்துவிடு.

இயற்கையின் அனைத்து சாளரங்களுக்கும் பின்னே மறைந்துநிற்கும் உன் கட்புலனாகாப் பாதத்தை வருடுமாறு எங்கள் சுகந்தமணம் வீசவேண்டுமென்பதே எங்கள் ஆசை.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
52 O King of all our ambitions, open the doors of noble aspirations in the mansion of our souls.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 26 செப்டம்பர், 2021

51. லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.

மாற்றமெனும் மீனவன் எங்கள்மேல் பிரபஞ்சமாயையெனும் வலையை வீசியுள்ளான். மனிதக் காப்பீட்டின் பொய்யான வாக்குறுதிகளெனும் நீரில், எங்களை மரணவலை தொடர்ந்து நெருங்குவதையறியாமல், நாங்கள் நீந்திக் கொண்டிருக்கின்றோம். ஒவ்வொரு மாயவலைப் பிடிப்பிலும், பல மாட்டிக்கொள்கின்றன - ஒருசிலதே தப்புகின்றன. நான் ஆழ்கடல் தளத்தில் அமைதியான யோகசமாதியில் ஆழ்ந்து மூழ்கி, காலவலையிலிருந்து தப்பிவிட்டேன்.

அளவற்ற கருணைக்கடலே, என்னையும் என் சகோதரர்களையும் இந்த லோகாயதப் பற்றெனும் வலையில் மாட்டிக்கொள்வதிலிருந்து காப்பாற்று.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
51 Save us from the net of matter attachment.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 24 செப்டம்பர், 2021

40. நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன்னை நிரந்தரத்தின் முடிவில் பிடித்துவிடுவேனா?

இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன் வருகையை முன்னரே அறிவிக்கும் தூதுவனாக என் உள்ளமைதியிலிருந்து இன்பக் கிரணங்கள் பரந்து விரிகின்றன.

பல இரவுகளில் மினுமினுக்கும் வஸ்திரங்களில், பல விடியற்காலைகளில் பளபளக்கும் மரகத முகத்திரைகளையும், பனித்திவலை முத்துக்களையும் அணிந்துகொண்டு, பல சந்திக்காலங்களில் மாட்டின் மணியோசைகளுடன் இயைந்து நாட்டியமாடி, பல வருடங்கள் வசந்தகால மலர்களுடனும், வேனிற்கால காய்கனிகளுடனும், பனிக்கால வைரத்தைப் போன்ற ஆலங்குச்சிகளாலும், மடமடவெனப் பெய்யும் மழைகளாலான பளீரென்று மின்னும் வஸ்திரங்களாலும் அலங்கரிப்பட்டு, உன்னை ஆவலுடன் எதிர்பார்த்து என் ஸ்ம்ருதித் தோட்டத்தில் காத்திருந்தேன். 

உன் பக்தர்களிடமிருந்து நாட்களைக் கால ஓநாய் திருடிச் சென்றுவிடுவதால், இவையெல்லாம் இப்போது இல்லை. நான் இப்போது தனியாக - தன்னந்தனியாக -  உள்ளேன்; கணப்பொழுதில் மறையும் விழாக்கோலங்களின் மேலிருந்த ஆசைகள் ஓடி மறைந்துவிட்டன. ஆயினும், நான் உன் பாதையைக் கண்டுகொள்ள எப்போதும் சுழலும் மணிநேரங்களுடன் பயணித்துத் தேடிக்கொண்டேயிருப்பேன். ஆயிரமாயிரம் ஆண்டுகளாயினும் எனக்கு கவலையில்லை, ஏனெனில், இதயங்களைக் கொள்ளை கொள்பவனே, உன்னை நிரந்தரத்தின் எல்லையில் எப்போதாவது பிடித்துவிடுவேன் என்பதை நான் அறிவதனால்!    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
40 May I seize Thee at Eternity's end?
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 22 செப்டம்பர், 2021

38. உன் நீலோத்பல சரணாம்புஜத்திலிருந்து, என் மனத் தேன்வண்டு அருந்த விரும்புகின்றது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன் நீலோத்பல சரணாம்புஜத்திலிருந்து, என் மனத் தேன்வண்டு அருந்த விரும்புகின்றது.

தெய்வத்தாயே, நீலோத்பல ஒளியுடைய உன் சரணாம்புஜத்தில், என் மனத் தேன்வண்டு லயித்திருக்கின்றது. உன் தாயன்பின் மதுரத்தேனை அது அருந்துகின்றது. உன்னுடையதான அந்த ராணித்தேனீ, உன் மணம் மேவிய மதுரத்தையன்றி வேறெந்தத் தேனையும் அருந்தாது.

தெய்வத்தாயே, என் கற்பனைத் தோட்டங்கள் மேலெல்லாம் பறந்துசென்று, எல்லா சிற்றின்ப தேனையும் நான் மறுத்து, இறுதியில் உன் இருதயாம்புஜத்தில் ஊறும் அமிர்தத்தேனை கண்டுகொண்டேன்.

நான் உன் சுறுசுறுப்பான தேனீ, பல ஜென்ம வயல்நிலங்களின் மேல் பறந்து, அனுபவ சுவாசத்தினை நுகர்ந்து கொண்டிருந்தேன்; உன் சுகந்தம் என் ஆன்மாவின் எல்லா வாசனை-தாகத்தினையும் தீர்த்துவிட்டதால், இனி நான் மேலும் சுற்றித் திரியமாட்டேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
38 The bee of my mind loves to drink from the Blue Lotus of Thy Feet
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 21 செப்டம்பர், 2021

37. சர்வசக்தியுடைய பேருணர்வே, என் எதிர்பார்ப்புகளெனும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சர்வசக்தியுடைய பேருணர்வே, என் எதிர்பார்ப்புகளெனும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக.

சாந்திக்கோயிலினுள்ளே, சுகானந்தக் கடவுளே, நீ வா! பக்திஸ்தலத்திற்குள், பிரம்மானந்தக் கடவுளே, நீ வா! என் நற்குண ஆலயத்தினை உன் சாந்நித்தியத்தால் புனிதமாக்கு.

சர்வசக்தியுடைய அல்லா, என் எதிர்பார்ப்புகளெனும் தன்னந்தனியே காத்திருக்கும் உயர்ந்த கோபுரத் தூணின் மீது வந்துன் அருள்மேவுக. அல்லா, என் மன மசூதி நிஸ்சலனமெனும் சுகந்தத்தை பரப்புகின்றது.

வா! உன் காலடிகளின் ஓசையைக் கேட்க நாங்கள் காத்திருக்கின்றோம். என் சுய-முன்னேற்றமெனும் விஹாரம் உன் வரவை எதிர்நோக்கி காத்திருக்கின்றது. 

வலுவான, தூய வெண்மையான பக்தியால் எழுப்பப்பட்ட என் கட்புலனாகாப் பிரார்த்தனைத் திருச்சபைக்குள், என் இதயத்தின் அன்பினால் புத்துணர்வூட்டப்பட்ட பணிவான அர்ப்பணங்களை நாள்தோறும் வந்து நீ ஏற்றுக்கொள்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
37 Hover over the minaret of my expectations, O Mighty Spirit.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 19 செப்டம்பர், 2021

27. சுவாமி ஆதிசங்கரராய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சுவாமி ஆதிசங்கரராய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.

சுவாமி ஆதிசங்கரரே, ஞானவானில் பிரகாசிக்கும் நீங்கள் ஒரு அற்புத நட்சத்திரம்! சமய சடங்குகளின் இறுக்கத்தினால் கருத்த பல ஆன்மாக்கள் மீது நீங்கள் உங்கள் ஒளியை வீசினீர்கள்.

மனித இருளெனும் பல ஆடுகள் உங்கள் மெய்யுணர்வென்னும் சிங்கத்தின் உறுமலுக்கெதிரே நடுங்கி ஓடி ஒளிந்தன. கிறிஸ்துவுடன், நீங்கள்: "இறைவனே நான்,"  "நீ இறைவன்," "நானும் என் இறைத்தந்தையும் ஒன்றே" என முழக்கமிட்டு, எங்களை லோகாயத உறக்கத்திலிருந்து விழிப்புறச் செய்தீர்கள்.

"காட்சியில் உண்மையாகத் தோன்றும் பொருட்களின் பொய்ம்மையை"  முதலில் விவரித்த உங்களுக்கு எங்கள் நமஸ்காரங்கள். 

சுவாமிகளின் சுவாமியே, வரையறுக்கப்பட்ட ரூபங்களுடைய பொருட்களெனும் லயிக்கும் அலைகளுக்கு அடியில், மறைவாக நடனமாடும் ஒரே பேருணர்வுச் சமுத்திரத்தைக் கண்டுகொள்ள எங்களுக்குக் கற்றுத் தந்தீர்கள்.     

எங்கள் கடவுள் சுழித்த-முகத்துடன், பழிவாங்குகின்ற, குற்றம் கண்டுபிடிக்கின்ற தன்மைகொண்டவர் அல்ல, மாறாக, அவருடைய முகம் அனைவரையும் வசீகரிக்கும் பிரகாசமான மந்தகாச புன்னகை தரித்தது என நீங்கள் எங்களுக்குப் பகர்ந்தீர்கள். எங்கள் இதயங்களில் மலர்ச்சியாகப் பூக்கும் புன்னகையைப் பெறுவதெப்படி என்பதையும், எங்கள் ஆன்ம மலர்-ஜாடிகளில் மகத்தான, விண்ணுலகப் புன்னகையாலான பூங்கொத்தினை  வைத்து அலங்கரிப்பதெப்படி என்பதையும் எங்களுக்கு விளக்கிக் காட்டினீர்கள். 

எங்கள் மகிழ்வான ஜீவிதங்கள் உங்கள் ஒளிக்கடலிலிருந்து கடைந்தெடுக்கப்பட்டவை; எங்கள் பலரின் ஜீவிதங்கள்  உங்கள் ஆனந்தக்கடலிலேயே நடனம்புரிகின்றன; எங்கள் ஆசைச் சூறாவளி தணியும்போது உங்கள் பரந்த மகிழ்ச்சியில் நாங்கள் லயம் அடைவோம்.

ஆதிசங்கரரே, உங்கள் புன்னகையில் பேருணர்வுக்கடல் நடனம்புரிவதை பலர் கண்டுள்ளனர்: உங்களுக்கு எங்கள் சிரம்தாழ்ந்த நமஸ்காரங்கள்!

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
27 Come to me as Swami Shankara.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 16 செப்டம்பர், 2021

26. கிருஷ்ணா, தெய்வீக கோபாலனாய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கிருஷ்ணா, தெய்வீக கோபாலனாய் வந்து எனக்குத் தரிசனம் கொடு.

கிருஷ்ணா, இந்துஸ்தானின் பிரபுவே, தென்றல் காற்றில் தவழ்ந்து வரும் உன் ஆனந்தக் குழலோசை, வழிதவறிச் சென்ற கன்றுகளை அவைகளின் வீடுதிரும்ப வழிநடத்திய அந்த ஜமுனா நதிக்கரையின் தனிமையைக் கண்டு நான் மனமிரங்கினேன்.

அன்பின் தாமரையே, உன் மயக்கம்-தெளிவிக்கும் கண்களைத் தரிசிக்க முடியவில்லையே என நான் மனம் கலங்கிக் கொண்டிருக்கையில்,  உன் கட்புலனாகாப் பேருணர்வு என் அடர்ந்த பக்தியின் உறுதியினால் ரூபம் தரிப்பதைக் கண்டேன்.

நீல-வான ஒளிக் கதிர்களாலான உன் தெய்வீக ரூபம், நிரந்தரத்தைக் காலடியாகக் கொண்டு, என் மனத்தின் கரையோரங்களில் நடந்து சென்று, அங்கு நிலையான மெய்யுணர்வுப் பாதச்சுவடுகளைப் பதித்தது. நான் உன் பூம்பாதச்சுவடுகளைக் காலங்காலமாய்ப் பின்பற்றி நடந்த வழிதொலைந்த கன்றுக்குட்டிகளில் ஒன்று. உன் ஞானக் குழல் கீதத்தினைக் கேட்டு, இருண்ட பின்னணி கொண்ட பலரை ஒளியின் வாசல் வழியே வழிநடத்திச் சென்ற, நடுநிலை மார்க்கமான அமைதியுடன் கூடிய செயல்பாட்டுத்திறனை நான்  மேற்கொண்டு வாழுகின்றேன்.

தெய்வீக கிறிஸ்(ட்)ணா, நாங்கள் அனைவரும் உன் மேற்பார்வைக்குள் உள்ளதால், நாங்கள் முன்னேறிக் கொண்டிருப்பினும், வழிமாறிப் போனாலும், அல்லது அவநம்பிக்கையெனும் மூட்டத்தினால் ஸ்தம்பித்து நின்றிருந்தாலும், உன் வீடான என்றும் நிலைத்திருக்கும் விடுதலைப்பேற்றை நாங்கள் திரும்பப் பெற எங்களை வழிநடத்து. கிருஷ்ணா, உன் அன்பினையறிந்த ஒவ்வொரு அன்பரின் இதயத்திலும் நீ கொலுவீற்று ஆட்சிபுரிகின்றாய்.  

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
26 Come to me, O Krishna, as the Divine Cowherd.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 13 செப்டம்பர், 2021

28. மோசஸாக வந்து தரிசனம் கொடு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மோசஸாக வந்து தரிசனம் கொடு.

ஓ மோசஸ், தேவதூதர்களின் மலர்ந்த மலர்ச்சுடரே! உங்கள் ஞானத்தின் சக்தி பலரை சோகப் பாலைவனத்தில் இருந்து புறப்பாடு செய்வித்து, மலர்ச்சியான ஆனந்த பூமிக்கு வழிநடத்திச் சென்றது.

உங்கள் வாழ்வின் உதடுகள், ஆன்ம-இருளை உண்டாக்கும் முட்புதர்களை ஞானத்தின் கனலினால் சுட்டுப்பொசுக்கி, அதன்மூலம் பிரகாசிக்கும் சுடரொளியில் கடவுளின் கருணை-முகத்தினை தரிசிப்பதற்கான ரகசியமான வழிகளை உபதேசித்தன.

அன்பின் "ஒளிர்ந்துசுடரும் புதர்ச்செடியின்" அருகில், அனைவருக்காகவும் கருணையால் சொரியும் கண்ணீர்மல்க நிற்கும் உங்களை அங்கு கடவுள் பார்த்து இவ்வாறு பகர்ந்தார்:
"என் சொர்க்க லோகத்து தேவதைகள் பத்து பேர் இங்கு பூலோகத்திற்கு உன்னுடன் வந்து சேர்ந்துகொண்டு, என் பத்து அனுசாசனங்களை, அவர்கள் அமைதியாக வீரக்கொம்பினால் எல்லா காலங்களிலும் ஊதிக்கொண்டு, என் தெய்வீக குணங்களின் கட்புலனாகாத படையின் அணிவகுப்பைப் பிரகடனப்படுத்தி, பாபம், தவறு, அசத்தியம், மற்றும் அவைகளின் மருள்-போதையூட்டம் பெற்ற சிப்பாய்கள் ஆகியவற்றின் துணையால் சூழ்ந்த மனித இருள் சைத்தானைப் போரிட்டு வெல்ல போர்முரசு கொட்டிக் கொண்டேயிருப்பார்கள்." 

ஓ மோசஸ், நீங்கள் முக்திக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு! இருண்ட யுகத்தினில் தீய மருட்சக்திகளை போரிட்டு வெல்வதற்காக நடாத்திய உங்கள் இடையறாத அணிவகுப்பில் சேர்வதற்காக பல போர்வீர-ஆன்மாக்கள் தங்களை நாடுகிறார்கள். 

கடவுளை-நேசிக்கும் மோசஸ், கோழைத்தனத்தை வீரத்தால் வெல்லவும், வென்று, எல்லா இதய அரியாசனத்திலும் ஆட்சிபுரியும் கடவுளர்களுக்கு கடவுளானவரை - அவரைத் தவிர வேறெந்தக் கடவுளையுமன்றி - உன்னதமாக வழிபட எங்களுக்குக் கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
28 Come to me as Moses.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 9 செப்டம்பர், 2021

23. அறியாமை மூடியினைத் தகர்த்திட உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அறியாமை மூடியினைத் தகர்த்திட உரிமையுடன்-வேண்டுதல்.

என் உணர்வுதளம் ஊனுடம்பெனும் சிறுசிமிழிக்குள் அறியாமை மூடியினால் மூடப்பட்டு அடைந்து கிடப்பதை இனி விட்டொழியட்டும். பிரபஞ்சப் பேருணர்வுக் கடலில் நான் பகலிரவாய், நாள்தோறும், வருடங்கள்தோறும், ஜென்மங்கள்தோறும் வெகு அருகாமையிலேயே மிதந்து இயங்கிக் கொண்டிருப்பினும், கடலுடன் தொடர்புறவு கொள்ள முடியவில்லை. பிரபஞ்ச நாதத்தின் பொங்கும் அதிர்வலைகளாலும், உன் புனித நாமத்தின் பேரலைகளாலும், மிக அண்மையிலேயே வாழ்ந்து கொண்டிருந்தும், என்னை உன்னிடமிருந்து தனிமைப்படுத்திக் கொண்டிருந்த, அறியாமை மூடியினைத் தகர்த்து எறிந்தேன். இப்போது என் உடம்பினுள்ளே உள்ள உணர்வுதளம், வெளியே சர்வ-வியாபக பேருணர்வுடன் சந்திக்கும். இனி உன்னை அறியாமல், உணராமல், நான் உன் சிந்தனையின்றி உன்னுள் இயங்கமாட்டேன். என் உள்ளேயிருக்கும் உன் பிரதிபிம்ப சைதன்யம் , எங்கும் பரவியிருக்கும் உன் கூடஸ்த-சைதன்ய பிரதிபிம்பத்துடன் ஒருங்கிணையும். என்னுள்ளேயுள்ள "நான்" எனும் அகந்தையை விட்டொழிவதனால், நானே நீ, நீயே சிறு அகந்தைகள் எல்லாமுமாக ஆகியுள்ளாய் என்பதனை நான் அறிகின்றேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
23 Prayer-Demand for removing the cork of ignorance.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 7 செப்டம்பர், 2021

21. சர்வ வியாபகத்தன்மைக்காக புனித ஓங்காரத்தை உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சர்வ வியாபகத்தன்மைக்காக புனித ஓங்காரத்தை உரிமையுடன்-வேண்டுதல்.

புனித ஓங்காரமே, என் உணர்வுதளத்தின் எல்லையில் வந்து உன் பேரொலியை இசைப்பாயாக. உடம்புடன் அடையாளங்காணும் என் உணர்வுதளத்தின் குறுகிய வட்டத்தை உடைப்பாயாக. என் உடல், மனம், ஆன்மா, என் சுற்றுப்புறங்கள், நகரங்கள், பூமி, கோள்கள், பிரபஞ்சம், மற்றும் தோற்றத்திலுள்ள ஒவ்வொரு அணுவிற்குள்ளும் அதிர்ந்து ஒலிப்பாயாக. என் உணர்வுத்தளத்தினைப் பிரபஞ்சப் பேருணர்வுடன் இணைப்பாயாக.       
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
21 Prayer-Demand to the Holy Vibration for Omnipresence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 6 செப்டம்பர், 2021

20. கடவுளின் சகல அன்புகளினால் ஆன பூங்கொத்து.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளின் சகல அன்புகளினால் ஆன பூங்கொத்து.

இறைத்தந்தையே, குழந்தைகள் மேல்காட்டும் பரிவு, தாம்பத்தியக் காதல், நட்புறவு, பெற்றோரிடம் காட்டும் பாசம், ஆசிரிய-மாணவ உறவுகளினில் வெளிப்படும் அன்புகளினால் ஆன பலவண்ண பூக்களைக் கொண்ட பூங்கொத்தினை உருவாக்கி, நீ ஆட்சிபுரியும் என் இருதய பீடத்தில் சமர்ப்பிக்க எனக்குக்கற்பி. பூங்கொத்தினை ஒருக்கால் உருவாக்க இயலவில்லையெனில், நான் என் பக்தித் தோட்டத்தில் வளரும் அரிய அன்புமலரைப் பறித்து, உன்முன்னர் நான் அர்ப்பிப்பேன். அதனை நீ ஏற்றுக்கொள்வாயா? 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
20 A bouquet of all loves of God.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 4 செப்டம்பர், 2021

19. அகத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பரந்து விரியும் சகோதர அன்பினை வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அகத்திலிருந்து எல்லாவற்றிற்கும் பரந்து விரியும் சகோதர அன்பினை வேண்டுதல்.

தெய்வத்தாயே, என் நெஞ்சில் சுரக்கும் உன் அருட்கொடையான அன்பினால் என்னை நான் நேசிப்பதைக் காட்டிலும் மேலாக, என் குடும்ப அங்கத்தினர்களை நேசிக்க எனக்குக்கற்பி. என் குடும்பத்தைக் காட்டிலும் மேலாக, என் அக்கம்பக்கத்தினர்களை நேசிக்க எனக்கு அருள்புரி. என் அக்கம்பக்கத்தினர்களைக் காட்டிலும் மேலாக, என் நாட்டினை நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து. என் நாட்டுமக்கள், அக்கம்பக்கத்தினர்கள், குடும்ப உறுப்பினர்களைக் காட்டிலும் மேலாக, என் உலகினையும், அதில் வாழும் எல்லா மனித சகோதரர்களையும் நேசிக்க என் மனத்தை விரிவுபடுத்து.

முடிவில், அனைத்திற்கும் உச்சமாக உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஏனெனில், உன் அன்பினால்தான் மற்ற அனைத்தையும் நேசிக்கமுடிகின்றது. நீயில்லாமல் என்னால் மற்ற யாரையும், எதனையும் நேசிக்கவே முடியாது. 

இறைத்தந்தையே, இல்லற அன்பின் வாயில்களின் வழியே நுழைய எனக்குக்கற்பி, மேலும் நண்பர்களின் நேசத்தின் மூலம் விஸ்தாரமான சமூக அன்புக்கட்டிடத்திற்குள் நுழைய எனக்குக்கற்பி. பின், சமூக அன்பின் கதவுகள் வழியே சென்று இன்னும் விரிவான சர்வதேச அன்பின் அரண்மனைக்குள் நுழைய எனக்குக்கற்பி. சர்வதேச அன்பின் வாயில்களின்மூலம் நுழைந்து தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் செல்ல எனக்குக்கற்பி. ஆங்கே, எல்லா உயிருள்ளவைகளும் ஜடப்பொருட்களும் உன் அன்பினால் சுவாசித்து வாழ்வதைக் காண்பேன். 

குடும்ப, சமுதாய, சர்வதேச அன்பினாலான எந்தவொரு வசீகரிக்கும் அழகிய வாயில்களிலும் மயங்கித் தாமதிக்காமலிருக்க எனக்குக்கற்பி. அன்பின் சிறிய எல்லைகளுக்கு இட்டுச்செல்லும் இந்த எல்லா வாயில்களின் வழியேயும் நுழைந்து மனித அன்பின் கடைசிவாயில்வரை சென்று, பின்னர் நான் தெய்வீக அன்பின் முடிவற்ற எல்லைக்குள் நுழைய எனக்குக்கற்பி. அங்கே, வாழும் உயிர்களையும், ஜடம்போன்று வாழ்பவைகளையும், ஜடமாக உறங்குபவைகளையும் என்னுடையதாகவே நான் காண்பேன். 

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
19 Prayer for expanding love from self to all brethren.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!