செவ்வாய், 28 டிசம்பர், 2021

225. நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.

பிரியமான இறைத்தந்தையே, எனக்குத் தாகமாக இருக்கும்போது தண்ணீரைப்  பருகுகிறேன், ஆனால் நீதான் அதன்மூலம் உயிரூட்டும் சக்தியை எனக்குத் தருகின்றாய். குளிக்கும்போது நான் புத்துணர்வு பெறுகின்றேன், நீதான் உன் தூய்மையாக்கும், புத்துணர்வூட்டும் சக்தியை நீருக்கு அளித்துள்ளாய் என்பதை நான் உணர்கின்றேன். என் முகத்தில் சூரியவொளி விழும்போது, உனது போஷிக்கும் கதகதப்பினால் என்னைத் தொடுவதாக உணர்கின்றேன். நான் சூரியவொளியிலும், தென்றல்காற்றிலும், விடியற்பொழுதிலும், மத்தியானத்திலும், சந்தியாகால ஒளியிலும், அன்புநண்பர்களின் இதயத்திலும் உன்னைக் கண்டு சிரம்தாழ்த்தி வணங்குகின்றேன்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
225 I bow to Thee in the sunshine, breeze, dawn, and hearts of loving friends.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: