சனி, 27 பிப்ரவரி, 2021

215. அனைத்து இதயங்களினிலிருந்தும் தொலைந்து போன என் இசை ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

அனைத்து இதயங்களினிலிருந்தும் தொலைந்து போன என் இசை ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.

என் கனவுகளின் ஒளிமயங்கிய சோலையில், இனிமையானதும் சுவாரஸ்யமானதுமான என் வாழ்வின் இசையை நான் சன்னமாகக் கேட்டேன். ஆவலுடன் அதை நான் கேட்க, அந்த இசை மிக மென்மையான இனிமையுடன் ஒலித்துக்கொண்டே, மென்மேலும் மெலிவுற்று இறுதியில், நான் அதை என் ஸ்தூலக் காதுகளினால் கேட்கமுடியாதவாறு ஆகிவிட்டது.

இந்தப் புதிய இசையின் தெய்வீக கீதத்தைப் போல் வேறு ஏதேனும் இசையைக் கேட்டுள்ளோமா என நினைத்தவாறு, பொறுமையுடன் நான் காத்திருந்தேன். அப்படி ஒன்றும் சிக்கவில்லை; கனவில் வந்து செல்லும் மங்கலான ஆவி போல் வந்து சென்ற அந்த இசையினைப் போன்றதொரு இசையை என் வளமான ஞாபகப் பெட்டகத்துள் நான் முழுவதுமாகத் தேடியும் ஒன்றும் கிடைக்கவில்லை. 

நான் அந்த இசையை உண்மையிலேயே கேட்டுள்ளேனா? அல்லது நான் அதன் ஒத்திசையை கனவுகண்டேனா?  அது என் எல்லாக் கனவுகளின், எல்லா லட்சியங்களின் அதியற்புத நிஜமான இசையா? அல்லது கலைந்து போகும் கனவில் ஒத்திசைத்த மெல்லோசையா?

நான் காத்திருந்தேன். என்னுள்ளே புகுந்து அடியாழத்திற்கு ஆழ்ந்தேன். எல்லா புலன்களின் துறைகளின்பின்னும் சென்று பித்தனாய் அலைந்து, பேயாய்ப் பறந்து, நான் என் கனவுகளில் கேட்டு, பின் தொலைந்த அந்த இசையை மீண்டும் ஒருமுறை கேட்கத் தவித்தேன்.

கடைசியில், நான் என் கனவுகளின் ஒளியலைகளைக் கண்டேன்; அவற்றில் என் பூலோக ஜென்மங்களிலுற்ற எல்லா ஆசைகளின் விருப்ப அலைகளும் நடனமாடுவதையும் கண்டேன். நான் பல தேவலோக இன்னிசைகளை செவிமடுத்துக் கேட்டேன்; ஆனால் அவை முன்னம் நான் ஒருமுறை கேட்டு, பின் தொலைந்த அந்த இசையைப் போன்றில்லை. 

திடீரென்று, நான் கனாக்கண்டு மறுபடியும் என் ஆன்மாவின் அந்த தொலைந்த இசையைக் கேட்டது போல் எனக்குத் தோன்றியது.

நான் எல்லாக் கனவுகளையும் ஒரேகணத்தில் கண்டுற்றேன் -  குறிப்பிட்ட எந்த ஒரு இசைக்காகவும், அந்த இசை ஒலித்த ஒரு குறிப்பிட்ட கனவிற்காகவும் என் நாட்டம் செல்லவில்லை. ஆஹா, அத்தருணத்தில், தொலைந்து போன என் இசை, என் எல்லாக் கனவுகளிலும் கண்ட அனைத்து வாழும் இதயங்களினிலிருந்தும் ஊற்றாய்ப் பொங்கி ஒலித்தது.  

எந்த செவியும் கேட்காதது,
எந்த எண்ணத்தாலும் பிடிக்க முடியாதது,
எந்த அன்புணர்ச்சியும் உணராதது,
எந்த கனவின் கற்பனைக்கும் எட்டாதது, 
எந்த நாக்கும் விளக்காதது,
எவரால் கூற முடியும்,
அந்த என் ஆருயிர் இசையைப்பற்றி.
ஆனால் அனைவற்றையும் மறைத்திருக்கும் திரைகளுக்குப் பின்னே -
என் ஆன்மாவின் ஆருயிரான,
அந்த தொலைந்து-மீட்கப்பட்ட இசையை நான் உணர்ந்தேன்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
215 My lost music sprang from the heart of everything.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 22 பிப்ரவரி, 2021

133. செயல்களைத் துரிதப்படுத்த உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

செயல்களைத் துரிதப்படுத்த உரிமையுடன் வேண்டுதல்.

உன் ஆற்றலின் அலைகள் என் செயல்களினில் நடனம் ஆடட்டும். நீ எப்படி அறிவார்ந்த முறையில் அணுக்களை, மலர்களை, பிரபஞ்சங்களை எல்லாம் சுறுசுறுப்பாய் உருவாக்குகின்றாயோ, அப்படி மகிழ்ச்சியுடன் சுறுசுறுப்பாகச் செயலாற்ற எனக்குக் கற்பி. நீ எப்பொழுதும் காரியமாயிருந்தாலும், ஆனந்தம்பொங்கும் இதயங்களின் வழியே நீ நிரந்தரமாக புன்னகை பூக்கின்றாய். நான் வாழ்க்கைத் தொழிற்சாலையில்  உழைக்கையில், உன் என்றும் வாடாத புன்னகையை நான் தரிக்க எனக்கு அருள்புரி.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
133 Demand for quickening activity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2021

54. எங்களை உன் குரலைக் கேட்குமாறு ஒன்றிசைக்கச் செய்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்களை உன் குரலைக் கேட்குமாறு ஒன்றிசைக்கச் செய்.

அன்பு இதயங்களெனும் மைக்ரோபோன்களின் வழியே, சத்குருவான உன் குரலால் எண்ணற்ற ஒலிப்பதிவுகளை உட்பொதித்துள்ளாய். உன் ஞானமொழி  மனங்களின் வெளியில் ஆனந்தத்தில் லயித்த இதயங்களைத் தேடி உலவி வருகிறது.

புலனின்ப ஒலிச்சிணுக்குகளினால் (static) செவிடாகிய ஆன்மாக்களால் கேட்க முடியாமல், உன் எச்சரிக்கும் உபதேசங்கள் கேட்பாரில்லாமல் வருத்தத்துடன் கடந்துசெல்கின்றன. 

தெய்வ ஒலிபரப்பாளனே, அசட்டையெனும் ஒலிச்சிணுக்குகளுக்கடியில் நசிந்த எங்கள் ஆன்மாக்களை மீட்டு உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; உன் ஒலிபரப்பை நாங்கள் ஏற்றுக்கொள்ளுமாறு நுண்ணிய தொடுதல்களினால் எங்களை உன்னுடன் ஒன்றிசைக்கச் செய்; அதன்மூலம் நாங்கள் உன் அற்புதமான ஆனந்தப்பரவச விழிப்பு நல்கும் கீதத்தைக் கேட்க எங்களைப் பக்குவப்படுத்து. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
54 Tune us, that we may hear Thy Voice.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 19 பிப்ரவரி, 2021

77. எல்லா ஆன்ம-சுடர்களுக்கும் அடியில் ஒளிரும் ஒரு பெருஞ்ஜோதியைப் பார்க்க உதவ உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லா ஆன்ம-சுடர்களுக்கும் அடியில் ஒளிரும் ஒரு பெருஞ்ஜோதியைப் பார்க்க உதவ உரிமையுடன் வேண்டுதல்.

நித்திய பெருஞ்ஜோதியே, பிரபஞ்ச உணர்வெனும் பலதுளைகள் பதித்த பெரும் எரிவாயு-அடுப்பு வட்டிலுள்ள (gas-stove burner), ஒவ்வொரு மனித பிரக்ஞைகளாம் துவாரம் வழியாகவும் நீ சிறிய ஆன்ம-சுடர்களாக ஜ்வாலையுடன் கனல்வீசுகின்றாய். நீ ஜீவராசித் துவாரங்கள் மூலம் அவைகளின் ஆன்மாவாக ஜ்வாலையுடன் கனல்வீசும்போது,  பலவாகவும், குறுகியனவாகவும், சிறியனவாகவும், பகுபட்டதாகவும் வெளிப்படுகின்றாய். ஆனால் நீ எல்லா மனிதமனத் துவாரங்களுக்கடியிலும் ஒளிருமோர் என்றும் அணையாப் பரஞ்ஜோதி.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
77 Demand for seeing One Fire beneath all soul-flames
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 17 பிப்ரவரி, 2021

206. பூக்களும் வானமும் உன் சேதி சொல்லும் கட்டியக்காரர்கள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பூக்களும் வானமும் உன் சேதி சொல்லும் கட்டியக்காரர்கள்.

பூக்கள், வானம், அழகிய மலர்ச்சோலை போல் வானில் தோன்றும் காட்சி - இவையெல்லாம் தெய்வீகச்செய்தி பகர்பவை.

நான் அவைகளை ஆனந்தமாய் அனுபவித்துத் திளைக்கின்றேன்.

ஆனால் அவனை நினைவுபடுத்திய பின்னர், அவ்வழகிய தூதுவர்கள் மறைந்து போகின்றன; ஆயினும், என்னுயிர்க்குயிரான நேசனின் வரம்பில்லா கவின்மிகு அழகு என்னைத் தொடர்ந்து சிலிர்ப்பித்து மகிழ்விக்கின்றது.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
206 Flowers and skies, heralds of Thee.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

105. பிரபஞ்ச நாதத்தில் என் விரிவடைந்த உணர்வை உணரவைக்குமாறு உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச நாதத்தில் என் விரிவடைந்த உணர்வை உணரவைக்குமாறு உரிமையுடன் வேண்டுதல்.

இறைத்தந்தையே, பகுத்தறிவின் சுடராக, ஞானத்தின் கனலாக, இயைபான ஒற்றுமையின் தென்றலாக நீ எனக்கு விளங்கவேண்டும்.

அணுக்களும், எலெக்ட்ரான்களுமிடும் ரீங்கார கானத்தின் மூலமாகவும், அவற்றின் அதிர்வுகள் இசைக்கும் இசைகளின் மூலமாகவும் நீ வந்து விளங்கவேண்டும். 

எல்லா ஸ்வரங்களையும் ஊற்றெடுக்கச் செய்ததும், ராகங்கள் ஒவ்வொன்றுக்கும் தனித்துவ கானத்தைப் பாடப் பணித்ததுமான உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க எனக்குக் கற்பி. 

பிரபஞ்சத்தில் பல்வகைப் பாடல்களின் ஓசைகளுக்கடியில் அமிழ்ந்து தாழாத உன் பிரபஞ்சக் குரலைக் கேட்க நான் விரும்புகின்றேன். 

தியான மந்திரக் கோல் எல்லா சப்தங்களையும் தொட்டு, பூமி, ஆகாயம், நட்சத்திரங்கள் அதிர பவனி வரும் பிரபஞ்சத்தின் ஒருமை சப்தமான ஓம் எனும் பிரணவத்தில் அவற்றை சங்கமிக்கின்றது. எல்லா சப்தங்களின் பிரபஞ்ச கீதமான ஓம், ஓம் எனும் பிரணவநாதமாக எனக்கு விளங்கு. என் எல்லா உடற்திசுக்களும், எல்லா நாடிநரம்புகளும் இப்பொழுது உன் ஓம் எனும் பிரபஞ்ச கீதத்தைப் பாடட்டும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
105 Demand for realizing the expansion of consciousness in the Cosmic Vibratory Sound.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 13 பிப்ரவரி, 2021

126. கசகசா பூவிதழ்களுடன் நான் சாந்திதரும் கனவுகாண எனக்குக் கற்பி.


ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கசகசா பூவிதழ்களுடன்* நான் சாந்திதரும் கனவுகாண எனக்குக் கற்பி.

தாகத்தால் வாடும் ஆன்ம-மலர்களுக்கு, நான் வானிலிருந்து மழைத்துளிகளாய் உன் அமிர்த-நாமத்தைத் தாரையாகப் பொழிய எனக்குக் கற்பி. விழிப்புணர்வூட்டும் உன் சாந்தி ஒளியுடனான பொன்மயக் கனவு நல்கும் கசகசா பூவிதழ்களுடன்* நான் கனவுகாண எனக்குக் கற்பி. தெய்வப் பிராணமூச்சே, நீ மனிதர்களில் குறுகிய எல்லைக்குள் இயங்கும் பிராணமூச்சாகவும், எல்லா உயிரினங்களிலும் பரந்துவிரிந்த பிராணனாகவும், என்னுடன் சேர்ந்து வீசு.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
126 Teach me to dream Peace with the poppy-petals.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda














---
* - கசகசா பூவிதழ்களுடன் ஏற்படும் கனவு சாந்தி நல்கும் என்பது கனவிற்கு அர்த்தம் சொல்பவர்களின் கூற்று.
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 12 பிப்ரவரி, 2021

124. கண்ணீர்சிந்தும் கண்களில் என்னை பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு.


ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கண்ணீர்சிந்தும் கண்களில் என்னை பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு.

என் ஒளிப்பொறி உன் பேரொளியின் பொறியுடன் கலந்து எல்லாருடைய கண்கள் மூலமும் அது மின்மினுக்கட்டும். நான் ஆன்மாக்களின் கடலில் நீந்த எனக்கு அருள்புரி. மேன்மையான ஆசைகளெனும் மலைச்சிகர சறுக்குப்பாதையில் என்னை உன்னுடன் இணைந்து சறுக்கச் செய். புத்துணர்வுடன் மனங்களில் துளிர்க்கும் எண்ணங்களிலும், முனிவர்களின் அமைதியிலும், உன்னை எனக்கு உணரச் செய். கண்ணீர்சிந்தும் கண்களில் என்னைப் பரிவுடன் இரங்கும் கண்ணீர்த்துளிகளாக ஆக்கு. நீயும் நானுமாகச் சேர்ந்து உணர்வு அலைகளுடன் நடனம்புரிவோம், எல்லா இதயங்களையும் உன் தெய்வீகப் குதூகலத்தால் மகிழ்விப்போம்.  நீயும், நானும் எல்லா ஜீவராசிகளிலும் உயிர்த்துடிப்பாக இருப்போம்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
124 Make me the drops of sympathy in tearful eyes.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda














---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 11 பிப்ரவரி, 2021

57. என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என்மீது ஏவப்படும் குற்றச்சாட்டின் ஒவ்வொரு தோண்டலையும், நான் என்னை என்னுள்ளே சுரக்கும் நற்குண ஊற்றினுக்கருகில் கொண்டுசெல்லுமாறு செய்ய எனக்குக் கற்பி.

வாழ்க்கைச் சோதனைகளால் ஏற்பட்ட ஒவ்வொரு வடுவையும், உன் தர்மமான நியதியின் புனிதக் கரங்களால் எனக்கு வழங்கப்பட்ட தண்டனைப் பரிசுப் பதக்கங்களாக அணிந்துகொள்வேன். பிறரின் செய்கையால் உண்டான வருத்தத்தினால் சிந்தும் என் ஒவ்வொரு கண்ணீர்த் துளியும் என் மனதில் மறைவாகப் படிந்திருக்கும் மாசினைக் கழுவி நீக்கட்டும்.

கூரிய அனுபவக் கோடாலியின் ஒவ்வொரு வீச்சும் என் வாழ்க்கை மண்ணை மென்மேலும் ஆழமாகத் தோண்டட்டும். சுகஜீவித மண்ணில் சூழ்நிலையால் தோண்டப்படும் ஒவ்வொரு வடுப்படுத்தும் அடியும், என்னை என்னுள்ளே பொங்கும் உன் சாந்திச் சுரப்பியினருகே கொண்டுசெல்லட்டும். வாழ்வின் ஒவ்வொரு காயமும் உன் அன்பிற்காக உரக்கக் கூவவைக்கட்டும். எல்லாச் சோதனைகளும் கசப்பான அனுபவத்திற்கு மாற்றுமருந்தாய் ஆகி, என் ஆன்மாவிற்குக் குணமுண்டாக்கட்டும். பிறரின் அருவருப்பான கருணையின்மை, நான் லாவண்யமான காருண்யத்தை மேன்மேலும் பொழிய என்னை உத்வேகமூட்டட்டும். குருடாக்கும் இருள், என்னைத் தூண்டிவிட்டு உன் ஒளியை நோக்கி விரைய வைக்கட்டும். கடுஞ்சொற்கள் என்னைத் திட்டித் தாளித்து, எப்பொழுதும் நான் இனிய சொற்களை மட்டுமே உபயோகிக்கச் செய்யட்டும். என்மீது எறியப்பட்ட தீவினைக் கற்களால் ஏற்பட்ட ஒவ்வொரு காயச்சிராய்ப்பும், நல்லவையின்மேல் கொண்ட என் உறுதியையும், நல்லெண்ணத்தையும் தீவிரப்படுத்தட்டும்.

மல்லிகைப்பூக் கொடிப்பந்தலின் வேரை வெட்டும் கோடாலியின் கைகளை, அது புறக்கணிக்காமல் எப்படி அக்கைகளின்மேல் மலர்ச்சொரியுமோ, அப்படி என்னை வஞ்சனையால் அறுப்பவர்களுக்கு நான் என் மன்னிக்கும் பொறுமையெனும் மலர்ப்பொழிவைத் தவறாமல் வழங்கவும், அவர்களுக்கு உதவவும், நீ எனக்குக் கற்றுக்கொடு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
57 Teach me to use every dig of criticism to bring myself nearer to the Fountain of Goodness in me.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 8 பிப்ரவரி, 2021

47. எங்கும்நிறைப் பரவெளித் தொட்டிலில் எனையிட்டுத் தாலாட்டு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எங்கும்நிறைப் பரவெளித் தொட்டிலில் எனையிட்டுத் தாலாட்டு.

உன் நிரந்தரத்தின் குழந்தையான நான், நீலவண்ணக் கடந்தகால, பளீரெனத் துலங்கும் நிகழ்கால, மங்கலான தூசரநிற  (grey) வருங்காலத் தொட்டிலிலிட்டு ஆட்டுவிக்கப்பட்டு, இப்போது அமைதியின்றி சஞ்சலப்படுகின்றேன்.

நான் ஆற்றல்கொண்ட என் கால்களை அதில் திறனின்றிப் பிரயோகித்துச் சுழுக்கிக்கொண்டேன், ஆனால் ஒருவழியாக முயன்று கடைசியில் நான் அந்த இருமையின் மருட்தூளியிலிருந்து எகிறிக்குதித்து விட்டேன். நீ உன் எல்லையற்ற கரங்களினால் என்னைப் பிடித்துக்கொண்டு, எங்கும்நிறைப் பரவெளியில் என்னைத் தாலாட்டினாய்.

நான் உன் எங்கும்நிறை நெஞ்சகத் தொட்டிலில் பத்திரமாகக் காக்கப்படும் உன் நிரந்தரத்தின் சிசு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
47 Rock me in the cradle of all space.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

191. நான் எனக்குச் செலவழிப்பது போல், பிறருக்கும் செலவழிக்க எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் எனக்குச் செலவழிப்பது போல், பிறருக்கும் செலவழிக்க எனக்குக் கற்பி.

உன் கருணையால் நான் மற்றவர்களைக் காட்டிலும் அதிக செல்வம் உடையவனாக இருந்தால், என் தேவைக்கதிகமான செல்வத்தை வறியவர்களுக்குப் பகிர்ந்துகொடுக்க எனக்குக் கற்பி. ஏனெனில், நீயே தான் வறியவனாய் ஒரு உடலிலும், செல்வந்தனாக மற்றொன்றிலுமாக லீலை புரிகின்றாய். நீ, செல்வந்தனான உனக்கு செல்வத்தை அளித்துக் கொண்டு, அவன் தாராளமனத்துடன் உன்னுடைய செல்வத்தை வறியவர்களாகத்  தோன்றும் உனக்கு அளிக்கிறானா? இல்லையா? என்று அவனைச் சோதித்துப் பார்க்கின்றாய். 

பாக்கியசாலிகள் துர்பாக்கியம் தீண்டியவர்களைப் பொருட்படுத்தவில்லையெனில், அவனாலே உன் சர்வவியாபகத் தன்மையை உணரமுடியாது. வறியவர்களினிடத்தில் உன்னைக் காணாத, கொழுத்த சுயநலச் செல்வத்தால் குருடானவர்கள் இங்கு மறுபடி வறித்தவர்கள் ஆக்கப்படுவர். நெஞ்சிலிரக்கமற்ற செல்வந்தர்கள் மறுபடி வறுமையில் உழன்று, சொகுசுகளைப் பிரிந்து, அவர்கள் அதனால்படும் அல்லல்பாட்டை  உணர்ந்து, அதன்மூலம் மற்றவர்களின் தேவைகளையும் ஒருவாறு உணர்வார்கள். 

தானம் செய்யக் கற்பதற்காக மனிதர்களுக்கு நீ ஈந்த பரிசுகளை, பிறருடன் பகிர்ந்து கொள்பவர்கள் பாக்கியவான்கள். ஆனால், தேவையுடைய தங்கள் சகோதரர்கள் உதவிக்காக கதறியழும்போது, உபயோகத்துக்கு உகந்த உன் பரிசுகளை முடக்கி, வெறுமனே புழுத்துப்போக வைப்பவர்கள், ஆன்ம சோகையால் நெஞ்சம் குறுகி வறுமையில் காலாவதியாவார்கள்.

எதையும் யாருக்கும் கொடாமல் செல்வந்தனாக இறப்பவன் வறியவனே. ஆனால், மற்றவர்களுக்கு கொடுத்ததனால் வறுமையுற்று காலதேவன் வாயிலுக்கு செல்பவர்கள், உண்மையிலேயே செல்வந்தர்கள்.
 
செல்வத்தையும், உடல்நலத்தையும் இழந்த மற்றவர்களின் தேவைகளைக் கவனித்து, நம் செல்வம், உடல்வலிமை இழந்தால் நாம் எப்படித் உணர்வோமோ, அதைவிட அதிகமாக நாங்கள் அவர்களுக்காக உணர எங்களுக்குக் கற்பி. நமக்கு வறுமை ஒருக்கால் வந்துவிடுமோ எனும் நினைப்பே நமக்கு அச்சத்தையூட்டினால், தேவைச்சக்கரத்தின் கீழ் அகப்பட்டு நசித்தவர்களுக்காக, பலமடங்கு இரக்கப்பட எங்களுக்குக் கற்பி. 

தங்கள் உண்மையான தேவைகளுக்கு எப்படி சந்தோஷமாகவும், உரிமையுடனும் செலவழிப்பார்களோ, அப்படி  மற்றவர்களின் அத்தியாவசியங்களுக்காகவும் செலவழிக்க எங்களுக்குக் கற்பி. எல்லாவற்றையும் வழங்கும் சர்வ கொடையாளனான உன்னை மறந்து, உன் கொடைகளை மட்டும் நேசிப்பவர்களாக நாங்கள் இல்லாதிருக்க எங்களுக்குக் கற்பி. 

உன் பரிசுகளை உன்னைவிட பெரிதாக எண்ணுபவர்கள், தங்களை உன்னிடமிருந்து பிரித்துக் கொள்கிறார்கள். 

நீ எப்படி ஜீவராசிகளுக்கு வழங்குகிறாயோ, அப்படி உன் பரிசுகளை மற்றவர்களுக்கு எதையும் எதிர்பாராமல் அளிப்பவர்கள், தங்களை ஒன்றே பலவாறாக எல்லா ஜீவராசிகளிலும் காண்பார்கள். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
191 Teach me to spend for others as I spend for myself.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 5 பிப்ரவரி, 2021

173. விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைப்பது, நிஜத்தில் நான் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன் என்று விளங்குமாறு எனக்கு அருள்புரி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

விழித்துக் கொண்டிருக்கிறேன் என்று நான் நினைப்பது, நிஜத்தில் நான் கனவு கண்டு கொண்டிருக்கின்றேன் என்று விளங்குமாறு எனக்கு அருள்புரி.

எப்படி நாங்கள் தூங்கி ஓய்வெடுத்து, சற்றுநேரம் விழித்து, மீண்டும் உறங்குகிறோமோ, அதேபோல் பிறப்பு-இறப்பு என்னும் நிலையற்ற கனவுகளின் அடித்தளத்திலிருந்து, நாம் சிறிது காலத்திற்கு தோன்றுவோம், பின் மரணத் தூக்கத்தில் ஆழ்வோம், மீண்டும் மற்றொரு ஜென்மப் போராட்டக் கனவினைக் காணத் துவங்குவோம்.

ஜென்மசுழற்சிச் சறுக்குப்பாதையில், நாம் ஒரு கனவினிலிருந்து மற்றொன்றுக்கு சறுக்கிக் கொண்டுள்ளோம். வானகத்தீயினாலான தேரில் அமர்ந்து கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஒரு ஜென்மத்திலிருந்து மற்றொன்றுக்கு உருண்டு சென்று கொண்டுள்ளோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் லட்சியக்கனவுகள், தோல்விகள், வெற்றிகள் ஆகியவைகளைக் கடந்து செல்வோம். கனாக்கண்டு கொண்டே, நாங்கள் ஆழ்கடலாய்ச் சோதிக்கும் துன்பங்கள், சிரிப்புப் பேரலைகள், அலட்சியச் சுழல்கள், பெரிய விழாக்காட்சி நீர்ப்பரப்புகள், மரணங்கள், பிறப்புகள் - ஆகிய கனவுகளைக் கடந்து செல்வோம். 

நான் உண்மையிலேயே விழித்தது உன்னில் மட்டுமே!

பிறகு, நான் விழித்துக் கொண்டிருந்தேன் என்று நான் முன்னம் நினைத்த போது, நான் கனவுதான் கண்டுகொண்டிருந்தேன் என்பதை இப்போது நன்கு உணர்ந்துவிட்டேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
173 Bless me, that I may know that I am Dreaming while I think that I am awake.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 4 பிப்ரவரி, 2021

95. ஞானத்தை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஞானத்தை உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, நீயே நான் - நானே நீ. நீ ஞானம் - நான் ஞானம். நீ ஆனந்தம் - நான் ஆனந்தம். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
95 Demand for Wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

96. ஆனந்தத்தை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஆனந்தத்தை உரிமையுடன் வேண்டுதல்.

பரலோகப் பேருணர்வே, உன் ஆனந்த ஊற்று, என் எல்லா எண்ணங்கள், இச்சாசக்தி, உணர்ச்சிகள் வாயிலாகப் பொங்கியெழுந்து வெளிப்படட்டும். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
96 Demand for Bliss.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

97. என் வாழ்வெனும் குமிழ் பெருவாழ்வெனும் கடலாக உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் வாழ்வெனும் குமிழ் பெருவாழ்வெனும் கடலாக உரிமையுடன் வேண்டுதல்.

இறைத்தந்தையே, நான் உன் பிரபஞ்சப் பேருணர்வின் நெஞ்சில் உதித்த ஓர் உணர்வலை. நான் ஒரு குழிழி: என்னைக் கடலாக ஆக்கு.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
97 Demand that my bubble of life become the Sea of Life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

செவ்வாய், 2 பிப்ரவரி, 2021

76. மற்றவர்களின் காயத்தினில் மொய்க்கும் வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

மற்றவர்களின் காயத்தினில் மொய்க்கும் வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.

அமைதித் தேனீ என் இதயச் சோலைக்கு வழிநாடி வந்து சேர்ந்துள்ளது, அங்கே சரசரக்கும் எண்ண மரங்கள் தங்கள் மெல்லிய கிளைக் கைகளினால், விவேகமுடைய அல்லிமலர்கள், வேண்டிப் பிரார்த்திக்கும் குவளைமலர்கள், ஆன்மக் கதிர்வீசும் சாமந்திப்பூக்கள், அன்பினை அர்ப்பிக்கும் ஊதாப்பூக்கள் போன்றவைகளால் ஆன சுகந்தமான பூங்கொத்தினை நீட்டுகின்றன.

அங்கு, பல மலர்களினாலான என் இதயத் தோட்டத்திற்குள், என் அன்பின் இனிமையான மணம்வீசும் தென்றலினால் வருடப்பட்டு, பூக்கும் நற்குணங்கள் தங்கள் அகத்தே உன் இனிமையின் ஈரத்தைக் கொண்டுள்ள அவ்விடத்திலே, என் துறுதுறுப்பான மனத்தேனீ உன் தேனினிமைப் பொக்கிஷத்தில் தாவிக் குதித்துத் தடுமாறித் திளைக்கின்றது. 

மற்றவர்களின் காயத்தினில் விரும்பி மொய்க்கும், மொய்த்து அவர்களின் வலியை அதிகமாக்கும், வஞ்சப்புகழ்ச்சி ஈக்களை அறவே ஒழிக்க எனக்குக் கற்பி.

மற்றவர்களின் இதயக்கூட்டிலிருந்து சொட்டும் நற்குணத் தேனைக் கவரும் உன் உற்சாகத்துடிப்புள்ள தேனீயாக நான் ஆவேனாக.    
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
76 Teach me to abhor flies of sarcasm, which sit on the wounds of others.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!