புதன், 7 ஜூலை, 2021

8. ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

ஸத்குரு வணக்கம் (சமஸ்கிருத சுலோகம்).

பிரம்மானந்தத்தை சுயரூபமாக உடையவர், பரமசுகத்தை அருளுபவர், ஞானமூர்த்தி; இருமை குணங்களுக்கு அப்பாற்பட்டவர்; பரந்த ஆகாயவெளி நிகர் கட்டற்றவர்; அறியவேண்டுவன எல்லாம் அறிந்தவர்; நித்தியமான, தூய்மையான ஒன்றேயானவர்; எல்லா நிகழ்வுகளுக்கும் சாட்சி; எல்லா கற்பனை எல்லைகளுக்கும் அப்பாற்பட்டவர்; சத்வ, ராஜஸ, தாமச குணங்களால் களங்கப்படாதவர்; என்றும் விழிப்புணர்வுடன் இருக்கும் என் குருவே - உன்னை நான் தலை வணங்குகின்றேன்.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
8 Salutations to the Great Preceptor (Sanskrit Scriptures).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: