ஓம் விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
உன் புகழ்ப்பெயரைப் பாடிக்கொண்டே மலையுச்சிதோறும், உள்ளந்தோறும் பறப்பேன்.
என் தந்தையே, ஒரு மலையுச்சியிலிருந்து மற்றொரு உச்சிக்கு உன்னுடன் சேர்ந்து பறந்து செல்ல எனக்கு அனுக்கிரகம் செய்.
பசும்புல்வெளியின் மேல் நான் மல்லாக்கக் கிடந்து உனது பாட்டை பறவைகளை நோக்கிப் பாட எனக்கு அனுக்கிரகம் புரி.
மனித இதயங்களில் நான் ஊடுருவி உன் புகழ்கானத்தை அவைகளில் இசைவிக்க எனக்கு அருள் செய்.
நான் நட்சத்திர மண்டல விளிம்பினைச் சுழன்று சுற்றி, உன் பெயரை சுடரெழுத்துக்களால் அங்கு பதிக்க எனக்கு அருள்புரி. விண்துகள் ஆவிப்படரினைக் (nebulae) கொண்டு நான் உன் புனிதநாமத்தைப் பரப்புவேன்.
ரீங்காரமிடும் அணுக்களுடன் நான் கூடிச்சேர்ந்து அவைகளுடன் உன் பாடலை சுருதி லயத்துடன் இயைந்து இசைக்க எனக்கு அருளாசி வழங்கு.
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Original:
125 From peak to peak and heart to heart, I will Fly, singing Thy name.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக