சனி, 30 அக்டோபர், 2021

128. நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

நான் உன்னை மலரில் மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன்.

ஓர் மலரைப் பார்த்து வழிபட ஆரம்பித்தேன். திடீரென, இறைத்தந்தையே, நீ அங்கு மறைந்துநிற்பதைக் கண்டுற்றேன். உன் சாந்நித்தியத்தின் நறுமணத்தை அது வீசியது. உன் தூய்மையின் அழகு அதன் இதழ்களை அலங்கரித்தது. உன் ஞானத்தின் சொக்கத்தங்கம் அதன் இதயத்தினின்று ஒளிர்ந்தது. அனைத்தையும் அரவணைத்துத் தாங்கும் உன் சக்தி நளினமான புறவிதழ்களை நிரப்பியது. வாழ்வின் ரகசியமும் உன் என்றுமழியாத் தன்மையும் மகரந்தத்தில் பொதிந்து - உன் இன்னமுதைச் சுவைக்கும் வண்டின் நெஞ்சின் மேல் மேவியது. சாலையோரத்தில் வளரும் சின்னஞ்சிறு தளையின் நெஞ்சினுள்ளும் பிரதிபலிக்கும் உன் தோற்றத்தின் அற்புதத்தை எனக்குக்கற்பி. 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
128 I beheld Thee hiding behind the flowers.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 29 அக்டோபர், 2021

127. வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

வாழ்விலோ சாவிலோ, நான் உன் என்றுமழியாக் கரங்களால் காக்கப்படுகின்றேன்.

தெய்வத்தாயே, எல்லோரையும் மரணம் மறைவாகப் பின்தொடர்ந்தாலும், தீரர்களானவர்கள் அங்குமிங்குமெனப் பறக்கும் துப்பாக்கிக் குண்டுகளின் நடுவே செல்லும்போதும் புன்னகைப்பார்கள். ஆனால் நான் புன்னகைக்கின்றேன், ஏனென்றால் நிகழும் இந்த வாழ்க்கையலைகளின் மேலே நான் மிதந்தாலும், மரணச் சுழலலையின் அடியில் நான் மூழ்கினாலும், உன் காக்கும், சர்வவியாபக நிரந்தரமான வாழ்க்கையில் நான் - உன் என்றுமழியாக் கரங்களால் அரவணைக்கப்பட்டு - அமைதியாக வீற்றுள்ளேன். 
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
127 Whether dead or living, I am held in Thine Immortal Arms.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda


---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 27 அக்டோபர், 2021

114. கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

கடவுளின் சாந்நித்தியத்தை உணர உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, என் பிரார்த்தனைக்கு அடித்தளமாக நீயிருந்தும், ஏன் நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய்? என் உணர்வுகளில் நீ அதிர்ந்தாலும் என் எண்ணங்களின் திரைக்குப் பின்னாலிருந்து உன் சாந்நித்தியம் வெளிப்பட்டாலும், நீ மிகத்தொலைவில் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறாய். வா, தந்தையே, வந்து இந்தத் திரையை விலக்கு! வா, எந்தையே, வா! என் பிரார்த்தனைகளின் குரலைக் கேள். நான் உன்னை அறிய விரும்புகின்றேன். நான் உன்னிடம் பேச விரும்புகின்றேன். நான் உன்னிடம் பிரார்த்திக்க விரும்புகின்றேன்; நீ என் பிரார்த்தனைகளைக் கேட்பதையும் நான் அறிய விரும்புகின்றேன். உன்னிடம் என்னை அழைத்துச் செல்லும் பாதையை எனக்கு காண்பி.   
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
114 Demand for the realization of God's presence.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

திங்கள், 25 அக்டோபர், 2021

112. எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாம் வல்ல கடவுளுடன் ஐக்கியமடைய உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, வானத்தின் துளைகள் வழியேயும், நட்சத்திரங்களின் மினுமினுப்பின் வழியேயும் என்னைப்பார். சூரிய சந்திரர்களின் மூலம் என்னைக் கண்காணி. என் அன்பின் வழியே என்னை நீ நேசி. தென்றல் காற்றினால் என்னைத் தொட்டுப் பராமரி. என் இதயத்தின் வழியே என்னுளே நீ துடித்து செயல்படு. இந்த என் அழியும் தேகத்தின் வழியே உன் அழியாத் தன்மையினால் சுவாசி. என் குரலின் வழியே பேசு. என் கைகளின் மூலம் மற்றவர்களுக்கு உதவு. என் மனத்தினை உபயோகித்து மற்றவர்களுக்குப் புத்துணர்வூட்டு. என் மூச்சுக்காற்றின் வழியே நீ சுவாசி, ஏனெனில் இந்த பலவீனமான வயலின் வழியே நீ மட்டுமே உன் முழுமையான, நிரந்தர சங்கீதத்தைப் பாடமுடியும்.    

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
112 Demand for union with the Almighty.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

சனி, 23 அக்டோபர், 2021

111. எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.

இறைத்தந்தையே, உன்னை நான் என்னுள்ளே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை வெளியேயும் கண்டுகொள்வேனாக. உன்னை நான் வெளியே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை என்னுள்ளேயும் கண்டுகொள்வேனாக. உள்ளே நிசப்தத்திலும், வெளியே சத்தத்திலும் - உன்னை நான் என்னுள்ளேயும், வெளியேயுமாகக் கண்டுகொள்ள எனக்குக்கற்பி. நான் உன்னை எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள கற்பித்தாயெனில், சத்தமோ நிசப்தமோ, எனக்கு ஒரு பொருட்டல்ல.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
111 Demand to find God at any time and anywhere.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வெள்ளி, 22 அக்டோபர், 2021

110. உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

இறைத்தந்தையே, என் தியானமெனும் சிறுபடகு சிதறடிக்கும் சூறாவளியால்  அலைக்கழிக்கப்பட்டு சிரமத்துடன் உன் கரையை நோக்கி நகர்கின்றது. என் மனக்கடல் கொந்தளிக்கின்றது, ஆயினும், நான் உன்னை கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.

Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
110 Master Mariner, come and take charge of my boat.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

வியாழன், 21 அக்டோபர், 2021

101. பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

பிரபஞ்ச நாதத்தினை ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்த உரிமையுடன்-வேண்டுதல்.

ஓம் எனும் பிரபஞ்ச நாதமே, என்னுடன் எப்போதும் இரு, என்னை இருளிலிருந்து ஒளிக்கு வழிநடத்து, ஆன்ம-அறியாமையிலிருந்து ஞானத்திற்கு வழிநடத்து, நோயிலிருந்து ஆரோக்கியத்திற்கு வழிநடத்து, வறுமையிலிருந்து செழிப்பிற்கு வழிநடத்து, துன்பங்களிலிருந்து நிரந்தர ஆனந்தத்திற்கு வழிநடத்து  .
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
101 Demand that Cosmic Sound lead from ignorance to wisdom.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

86. சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிரு.

இறைத்தந்தையே, சுக்குநூறாகச் சிதறிய என் எண்ணங்களுக்கு நீ துருவ நட்சத்திரமாயிருந்து, அவைகளை நிரந்தர ஆனந்தத்தினையடைய வழிநடத்து.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
86 Be the Pole-Star of my shipwrecked thoughts.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

புதன், 20 அக்டோபர், 2021

85. என் அன்றாட செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் அன்றாடச் செயல்களின் கப்பலுக்கு நீ மீகாமனாயிரு.

இறைத்தந்தையே, என் அன்றாட முயற்சிகளின் கப்பலுக்கு நீ மீகாமனாயிருந்து, அதனை பூர்த்தியெனும் கரையையடைய வழிநடத்து.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
85 Be the Captain of my boat of daily activity.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

82. தெய்வீகக் காதலின் தீவிரத்தை உரிமையுடன் வேண்டுதல்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தெய்வீகக் காதலின் தீவிரத்தை உரிமையுடன் வேண்டுதல்.

பேருணர்வே, ஒரு லோபி எப்படிப் பணத்தை முழுமனத்துடன் விரும்புவானோ, அப்படி நான் உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. ஒரு குடிகாரன் எப்படி மதுவிற்கு அடிமைப்பட்டுப் பிணைந்திருப்பானோ, அப்படி என்னை உன்னிடம் பிணைந்திருக்குமாறு செய். தவறிழைப்பவர்கள் எப்படி அவர்களின் கெட்ட பழக்கங்களினை விடாமல் இறுக்கப் பிடித்துக்கொள்வார்களோ, அப்படி நான் உன்னை விடாப்பிடியால் பிடித்துக் கொள்ள எனக்குக்கற்பி. ஒரு தாய்  தனது மகவிடம் எப்படி கவனத்தைப் பிசகாமல் வைத்துக்கொண்டிருப்பாளோ, அப்படி நான் உன்மேல் கவனம் வைக்க எனக்குக்கற்பி. உன்னிடமிருந்து நழுவாமல் ஆணியடித்தாற்போல் என் கவனத்தை வைத்துக்கொண்டு, என் கடமைகளை முனைப்புடன் சிரத்தையாக நிறைவேற்ற எனக்குக்கற்பி. ஒரு லோகாயத மனிதன் எப்படி பொருட்களை விரும்பி நாடுவதில் மும்முரமாக இருப்பானோ அப்படி உன்னை நேசிக்க எனக்குக்கற்பி. உண்மையான காதலர்களின் முதற்காதலினால், உன்னைக் காதலிக்க எனக்குக்கற்பி.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
82 Demand for fervor in Divine Love.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!