Thy Light Transfigures All Creation - Sri Paramhansa Yogananda
பரமான மெய்யொளியே! கதிரவனின் வெப்பக் கதிர்களில் ஆகட்டும், நிலவின் குளிர்க் கிரணங்களில் ஆகட்டும், நீ கண்ணுக்குப் புலப்படாமல் மறைந்தே நிற்கின்றாய். வான விளக்குகள் வெளிச்சமிட்டுக் காட்டுவது எல்லாம் இயற்கைக் கன்னியை மட்டுமே, உன்னை அல்ல.
ஸ்தூலதீபங்கள்அடையாளம் காட்டும் பஞ்சபூதங்களால் ஆன இவ்வுலகு, என்னைப் பொறுத்தவரை இருள்மயமானதே. இம்முழுப் பிரபஞ்சத்தை உருமாற்றித் தோற்றுவிக்கும், உன் மறைவான ஒளிப்பிரகாசத்தைக் காண என் பார்வைக்குச் சக்தி கொடு.
நான் கண்மூடி அமர்ந்து, நிழல்களைக் கொண்டு நானே பின்னிய என் எண்ணவலையினில் சிக்கித் தவிக்கும் போது, நீ வண்ணமயமான காலைக் கதிரவனாய், மெய்ஞ்ஞானப் பிரகாசத்துடன் எனக்குக் காட்சியளி! இப்பிரம்மாண்டத்தில் செயல்புரியும் உன் லீலா விநோத நடனத்தை, கலைக் கண்களுடன் நான் ரசிக்க எனக்கு வரம் தா!
ஓம் ஸ்ரீ ஸத்குரவே சரணம்
#PHD

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக