திங்கள், 18 ஜனவரி, 2021

113. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நான் உன்னை உணர விரும்புகின்றேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நான் உன்னை உணர விரும்புகின்றேன்.

இறைத்தந்தையே, என் பார்வைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் வெளியே தென்படும் உன் அழகைக் காணமுடிகிறது.  என் கேட்கும் சக்திக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் பிரபஞ்சத் தோற்றத்தில் வெளிப்படும் உன் குரலைக் கேட்கமுடிகிறது. என் தொடுவுணர்ச்சிக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய், அதன்மூலம் உன் உலகைத் தொட்டுணரமுடிகிறது. மலர்களின் இனிமையிலும், போஷிக்கும் உணவின் சுவையிலும், உன் நிரந்தர இனிமையின் இருப்பை உணர்த்தும் சாராம்சம் மறைந்து விளங்குகின்றது. என் பிரார்த்திக்கும் குரலுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். நான் வழிபட உதவும் மனத்திற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் இளகிய உணர்வுகளுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் எண்ணங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் தியானங்களுக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். இயற்கையின் வனப்பின் மறைப்பிற்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். என் அன்பின் திரைக்குச் சற்றே பின்னால் நீ இருக்கின்றாய். உன்னை நீ உள்ளவண்ணம் எனக்குக் காட்டு, இந்த மர்மத் திரைகளுக்குப் பின்னாலிருந்து வெளிப்பட்டு.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
113 I want to feel Thee just behind the Voice of my Prayer.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: