ஞாயிறு, 3 ஜனவரி, 2021

121. தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

தாயே, என்னிடம் தயையின் ரூபத்தில் வா.

அந்த நாள் என்று விடியுமோ, பராசக்தித் தாயே, உன் பெயரை உச்சரிக்கையில் என் கண்களிலிருந்து கண்ணீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து, என் இதயத்தின் வறட்சியை வெள்ளக்காடாக்கி, என் அறியாமையின் இருண்ட நிலைக்கதவுகளைப் பேர்த்தெறியச் செய்யும் (அந்த நாள் என்று விடியுமோ?).  

பின்பு, தேங்கிய அந்த கண்ணீர்க் குளத்தில் ஒளிரும் ஞானத்தாமரை மலரும், என் மன இருள் முற்றிலும் அகலும். ரூபமற்றவளே,  எங்கும்நிறைந்த என் தாய் பராசக்தியே,  என்னால் உணரமுடியும் வண்ணம் தயை ரூபத்தில் என்னிடம் வா, வந்து என்னை சோகத்தின் கரைகளிலிருந்து மீட்டுச் செல்.
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
121 Come to me as Kindness.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: