செவ்வாய், 19 ஜனவரி, 2021

194. என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலில் நான் உன் மாய கீதத்தைக் கேட்டேன்.

ஓம் விக்னேஸ்வராய நம: 

ஸ்ரீ குருப்யோ நம:

ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே  நம:

என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலில் நான் உன் மாய கீதத்தைக் கேட்டேன்.

லோகாயத ஆரவாரயிசையின் கனத்த முகமூடியைத் தள்ளி விலக்கினேன். வரம்பற்ற கீதமே, உன் குரலைப் பிறகு நான் கேட்டேன். வயலின்களின் கூக்குரலிலும், யாழின் ரீங்காரத்திலும், என் மனத்தின் தீன-ஸ்வர விம்மலிலும் நான் உன் கீதத்தைக் கேட்டேன். என் ஆன்மாவின் அற்புத கீதமே, என் இதயத் தந்திகளுக்குள்ளே மறைந்திருக்கும் உன் மெல்லிய நளினமான  புலரும் இசை என் இருண்ட மனத்தளத்தில் பரந்து விரவுவதை, நான் இறுதியில் கண்டுகொண்டேன். மாயமந்திரக் குரலே, யுகங்களாய் என்னைப் பிணைத்த சோம்பலை விட்டொழிக்க வைத்தாய். என் கீதங்கள் அனைத்தினையும் உன் என்றும்-சாந்திதரும் கீத சந்நிதியில் நான் சமர்ப்பிக்க இங்கு வந்துள்ளேன்.  
 
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva

Original: 
194 In the Whisper-Sobs of my mind I heard Thy Magic Voice.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்

பிரம்மார்பணம் அஸ்து!         

கருத்துகள் இல்லை: