ஓம் விக்னேஸ்வராய நம:
ஸ்ரீ குருப்யோ நம:
ஓம் நமோ பகவதே ஸ்ரீ பரமஹம்ஸ யோகானந்தாய சத்குரவே நம:
என்னைப் புன்னகை-செல்வந்தனாக ஆக்கு.
அமைதியான சிரிப்பே, என் ஆன்மாவின் வழியே புன்னகை செய். என் ஆன்மா என் இதயத்தின் வழியே புன்னகை செய்யட்டும். பின், என் இதயம் என் கண்களின் வழியே புன்னகை செய்யட்டும்.
புன்னகையின் இளவலே! என் தோற்ற விதானத்தின் கீழுள்ள அரியணையில் வந்து அமர். உன் மிருதுவான ஆன்மாவை எந்த ஒரு பொய்ம்மை எதிரியும் உனையழிக்க நெருங்கமுடியாத வண்ணம், நான் என் வாய்மையெனும் கோட்டையில் பாதுகாப்பேன்.
என்னைப் புன்னகை-செல்வந்தனாக ஆக்கு. அதன்மூலம், உன் புன்னகைப் பொக்கிஷத்தை உலகிலுள்ள சோகம் கவ்விய எல்லா இதயங்களுக்கும் மாரிபோல் நான் வாரி வழங்குவேன்.
Translation: பரமஹம்ஸ தாசன் "Phd" Siva
Original:
50 Make me a Smile-Millionaire.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக